தமிழ்நாடு

'மருத்துவரை மிரட்டி எழுதி வாங்கிய போலிஸ்': ஜெயராஜ், பென்னிக்ஸ் மருத்துவச் சீட்டு மூலம் வெளியான உண்மைகள்!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல்நிலை நல்லநிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அளித்த சான்றிதழை போலிஸார் மிரட்டி வாங்கியதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

'மருத்துவரை மிரட்டி எழுதி வாங்கிய போலிஸ்': ஜெயராஜ், பென்னிக்ஸ் மருத்துவச் சீட்டு மூலம் வெளியான உண்மைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலிஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் சிறையிலேயே, அவர்கள் இருவரையும் கொடூரமான முறையில் சித்திரவதைகள் செய்து அடித்துக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அராஜக போலிஸாரின் இந்தக் கொடூரச் செயல் மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

எதிர்க்கட்சியான தி.மு.க, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும் என அரசை வலியுறுத்தி வருவதோடு, சட்டரீதியாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு துணை நிற்கும் என அறிவித்துள்ளது. சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையைக் கண்டித்தும், இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் சமூக வலைதளங்களில் குரல்கள் வலுத்து வருகின்றன.

'மருத்துவரை மிரட்டி எழுதி வாங்கிய போலிஸ்': ஜெயராஜ், பென்னிக்ஸ் மருத்துவச் சீட்டு மூலம் வெளியான உண்மைகள்!
Vignesh

இந்த சூழலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல்நிலை நல்லநிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அளித்த சான்றிதழை போலிஸார் மிரட்டி வாங்கியதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் வெண்ணிலா என்பவர்தான் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உடலை பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளார். மேலும் இருவரின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் போலிஸார் அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், ‘இருவருக்கும் எந்த பாதிப்பு இல்லை’ என எழுதிக்கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு மருத்துவர் வெண்ணிலா சம்மதிக்காத நிலையில் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளனர்.

பின்னர் 3 மணி நேரத்திற்கு பிறகு போலிஸார் கேட்டதுபோல மருத்துவர் வெண்ணிலா எழுதிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. போலிஸாரின் நெருக்கடியால் தற்போது மருத்துவர் வெண்ணிலா பிரச்சனைக்குள் மாட்டிக்கொண்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

'மருத்துவரை மிரட்டி எழுதி வாங்கிய போலிஸ்': ஜெயராஜ், பென்னிக்ஸ் மருத்துவச் சீட்டு மூலம் வெளியான உண்மைகள்!

இதனிடையே, கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வெங்கடேஷ் இருவருக்கும் காயம் இருப்பதாக சுட்டிக்காட்டி மருத்துவ சீட்டில் எழுதியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் இருந்து இருவரையும் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர் அழகர்சாமி இருவரும் காயத்துடன் இருப்பதைக் கண்டு அனுமதிக்க மறுத்துள்ளதாகவும், பின்னர் கிளைச்சிறையின் உயரதிகாரி சங்கர் என்பவர் போன் மூலம் அனுமதிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

அதனையடுத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் அனுமதிள்ளனர். இதனிடையே சிறையில் இருந்த இருவருக்கும் கடுமையான உடல்சோர்வு ஏற்பட அரசு மருத்துவர் வெங்கடேஷ் வரவழைக்கப்பட்டு இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

'மருத்துவரை மிரட்டி எழுதி வாங்கிய போலிஸ்': ஜெயராஜ், பென்னிக்ஸ் மருத்துவச் சீட்டு மூலம் வெளியான உண்மைகள்!

இருவரையும் பரிசோதித்த மருத்துவர் ஜெயராஜ், பென்னிக்ஸின் உடலில் காயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி பரிசோதனைச் சீட்டில் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த சீட்டில், இருவரின் உடலின் பின்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான காயங்களும், அதன் தடங்களும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது; கால் மூட்டுப் பகுதியில் காயத்தின் தடங்கள் இருந்ததாகவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மருத்துவ சீட்டு தற்போது வெளியாகி பெரும்பரபரப்யை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவச் சீட்டு உண்மையானதுதான் என்றும் தான் பரிசோதனை செய்து எழுதிக்கொடுத்ததாகவும் மருத்துவர் வெங்கடேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த மருத்துவ சீட்டால் தற்போது போலிஸாருக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories