தமிழ்நாடு

சாத்தான்குளத்தில் இருவரை அடித்துக்கொன்ற போலிஸ் இருவரின் ‘மோசமான’ மறுபக்கம் தெரியுமா ?

‘கையில் கம்பெடுத்தா நான் கொம்பண்டா’ என்று சினிமா வசனம் போல பேசித்திரிவார் போலிஸ் ரகு கனேஷ்.

சாத்தான்குளத்தில் இருவரை அடித்துக்கொன்ற போலிஸ் இருவரின் ‘மோசமான’ மறுபக்கம் தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரியை காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலை செய்துள்ள பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கனேஷ் பற்றிய மோசமான மறுபக்கம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஆர்.ராஜன் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில்,“தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரியை காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலை செய்துள்ள பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கனேஷ் ஆகிய உதவி ஆய்வாளர்களில் பாலகிருஷ்ணன் என்பவர் 2012ம் வருடத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவுக்கு உட்பட்ட திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றினார்.

அப்பொழுது ஒருநாள் அவர் மாலையில் வாகன தணிக்கையின் ஈடுபட்டிருந்த போது இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றதற்காக, எனது நண்பர் ஒருவரை தடுத்து நிறுத்தி அதிகார துஷ்பிரயோகத்தால் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று இரவு 11 மணிவரை வைத்து அடித்து நொறுக்கிவிட்டு விடுவித்து விட்டார்.

சாத்தான்குளத்தில் இருவரை அடித்துக்கொன்ற போலிஸ் இருவரின் ‘மோசமான’ மறுபக்கம் தெரியுமா ?

மறுநாள் காலையில் தான் இந்த சம்பவம் எங்களுக்கு தெரியவந்தது உடனே நண்பரை போய் சந்தித்தோம். நண்பரின் பின்பக்கம் முழுவதும் சரமாரியான காயத்தோடு படுத்திருந்தார். அதை பார்த்த எங்களுக்கோ ஜீரணிக்க முடியவில்லை. பைக்கில் மூன்று பேர் சொல்வதெல்லாம் அப்படியொரு தேசதுரோகமான செயலா?

இதுக்குலாம் இப்படி அடிக்கனுமா என்று தவறு செய்தால் அதற்கான வழக்கை பதிவு செய்யாமல் இப்படியா மனிதாபிமானம் இல்லாமல் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உதைப்பார்கள் என்ற மன வேதனையோடு நண்பரின் காயத்தையெல்லாம் புகைபடமாக எடுத்துக்கொண்டு அவரையும் அழைத்துக்கொண்டு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் ஒரு புகாராக கொடுத்தோம்.

ஆனால், அந்த புகாருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. உடனே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணிபுரியும் எனது நண்பரிடம் தெரிவித்தோம். நண்பரும் உடனே கிளம்பி திருநெல்வேலிவேலிக்கு வந்தார். அவரும் காயத்தையெல்லாம் பார்த்து வேதனையோடு இதை இப்படியே விடக்கூடாது உடனே இந்த புகைபடங்களையெல்லாம் இணைத்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் ஒன்று அளிப்போம் என்று சொன்னார்.

சாத்தான்குளத்தில் இருவரை அடித்துக்கொன்ற போலிஸ் இருவரின் ‘மோசமான’ மறுபக்கம் தெரியுமா ?

நாங்களும் ஒப்புக்கொண்டு புகார் ஒன்றை எழுதி அனுப்பிவிட்டு எங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டோம். நாட்கள் வாரங்களாகி மாதங்களாக கடந்தநிலையில் எனது வழக்கறிஞர் நண்பரிடமிருந்து ஒரு அழைப்பு ராஜன் நாம் மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகார் விசாரணைக்கு வந்துவிட்டது.

அவர் மீது நாம் அளித்த புகாரும் ஆதாரங்களும் வலுவாக இருப்பதால் அவர் வேலைக்கு கூட ஆபத்து வரலாம். அதனால் உதவி ஆய்வாளர் என்னை சந்தித்து “அண்ணன் நான் ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து அரசு வேலைக்கு வந்திருக்கேன். இந்த வேலையும் இல்லையென்றால் என் குடும்பம் என்ன நிலை ஆகுமென்று தெரியவில்லைனு” கெஞ்சுராப்ல எனக்கு என்ன சொல்ரதுனு தெரியல எனக்கும் அவர பார்த்தா பாவமாகத்தான் இருக்குனு என்னிடம் சொல்ல.

நானும் வழக்கறிஞர் சொன்ன விசயத்தையெல்லாம் நண்பணிடம் போய் இப்படி எஸ்.ஜ சொல்ராப்லயாம் என்ன பண்ணலாம் கேட்டப் போது அவன் கொஞ்சம் தீவிரமாகத்தான் இருந்தான் அவருக்கு எப்படியாவது தண்டனை வாங்கி கொடுத்துவிடவேண்டுமென்று ஆனால் அன்று நாங்கள் தான்

சாத்தான்குளத்தில் இருவரை அடித்துக்கொன்ற போலிஸ் இருவரின் ‘மோசமான’ மறுபக்கம் தெரியுமா ?

அவனிடம் சொன்னோம். அவர்தான் பணிமாறுதல் வாங்கிக் கொண்டு வேறு ஊருக்கு போய்ட்டாரே இனி ஏம்ல கோட்டு கேசுன்னு அலைஞ்சிட்டு இருக்க போற அதுவுமில்லாமல் நீ எஸ்.ஜ மேல வழக்கு போட்டிருப்பதால் உன் மேல தேவையில்லாமல் வழக்குகளை போட்டு உன்னை நிம்மதியா இருக்க விடமாட்டாங்க. அதனால சவத்த பேசாம வழக்க வாபஸ் வாங்கிட்டு நிம்மதியாக இருலன்னு

ஒரு சாதாரண மனிதனின் மனநிலையில் சொல்லிவிட மனம் முழுவதும் வலியிருந்தும் அவனும் ம்ம்... சரியென்று வழக்கை வாபஸ் வாங்க சம்மதித்து விட்டான். அதோடு அந்த வழக்கும் முடிந்து போனது. ஆனால், இன்று அதே உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்தான் இரு அப்பாவி வியாபாரிகளை அதே அராஜகத்தாலும் அதிகார துஸ்பிரயோகத்தாலும் அடித்து கொன்றிருக்கிறார் என்று தெரிய வந்த போதுதான் ஏதோவொரு குற்ற உணர்ச்சி குத்தி குடைகிறது.

அய்யய்யோ அன்றே மனித மிருகத்திற்கு தண்டனை வாங்கி கொடுத்திருந்தால் இன்று இப்படி இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கபடிருக்காதே என்று” என்று தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் இருவரை அடித்துக்கொன்ற போலிஸ் இருவரின் ‘மோசமான’ மறுபக்கம் தெரியுமா ?

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இன்னொரு காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் என்பவர் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களைத் தேவையில்லாமல் அடித்துத் துன்புறுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டவர்.

இதை இறந்துபோன ஜெயராஜின் மனைவி கொடுத்திருந்த புகார் மனுவிலும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ரகு கணேஷ் எப்போதும் கையில் லத்தியுடன் தான் ரோந்து வருவார். யாரைப் பார்த்தாலும், எதற்கு எடுத்தாலும் அடித்த பின்பே பேசுவார்.

தன்னை கொம்பன் என்று அழைக்கச் சொல்வார். அதற்குக் காரணம், ‘கையில் கம்பெடுத்தா நான் கொம்பண்டா’ என்று சினிமா வசனம் போல பேசித்திரிவார் என்று தெரிவித்தனர்.

இவர்களைப் போன்ற போலிஸுக்கு யார் பிறரை அடிக்கும் அதிகாரம் கொடுத்தது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு, நாகர்கோவில் காசி வழக்குகளில் அரசியல் பின்புலம் இருப்பதால் கைகட்டிப் பம்மும் போலிஸ் அதிகாரிகள் எளியவர்களை அடித்து ஹீரோயிச பில்டப் ஏற்றிக்கொள்கிறார்கள். போலிஸார் இதுபோல அப்பாவி மக்களை தாக்குவது தொடர்கதையாகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை போலிஸார் எப்படி கையாளவேண்டும் என்பதனை உயர் அதிகாரிகள் வழிக்காட்ட வேண்டும். மேலும் இதுபோல கொடூரமாக மக்களை தாக்கும் காவலர்களை அடையாளம் கண்டு அவர்களை மக்களுடம் உலவி பணியாற்றும் நடவடிக்கையை கட்டுப்படுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories