தமிழ்நாடு

வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமிக்கு ஒரு வருடமாக பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தொழிலதிபர் கைது!

சென்னையில் 15 வயது சிறுமிக்கு ஒரு வருடமாக பாலியல் தொல்லைக் கொடுத்துவந்த தொழிலதிபரை போலிஸார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த 54 வயதானவர் பால்ராஜ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் பாட்டியுடன் வசித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் தனது படிப்பை பாதியில் முடிந்த நிலையில், வறுமையின் காரணமாக பால்ராஜ் வீட்டில் வேலைகளை செய்து வந்துள்ளார்.

வீட்டில் வேலை செய்துவந்த சிறுமிக்கு பால்ராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டி கடந்த ஒரு வருடமாக பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார் பால்ராஜ்.

சிறுமியும் பயத்தில் வெளியே சொல்லாமல் பரிதவித்து வந்த நிலையில், பால்ராஜின் பாலியல் சேட்டைகள் ஒருகட்டத்தில் அத்துமீறி சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி தனது பாட்டியிடம் சென்று நடந்ததைக் கூறியுள்ளார்.

வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமிக்கு ஒரு வருடமாக பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தொழிலதிபர் கைது!

சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு போலிஸார் வழக்குப் பதிவு செய்து பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories