தமிழ்நாடு

அன்று “அச்சம் வேண்டாம்”... இன்று “கடவுளுக்குத்தான் தெரியும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பல்டிகள்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பம் முதல் நேற்று வரை அளித்த பேட்டிகள் அனைத்தும் அரசின் அப்பட்டமான தோல்வியைக் காட்டுவதாகவே உள்ளன.

அன்று “அச்சம் வேண்டாம்”... இன்று  “கடவுளுக்குத்தான் தெரியும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பல்டிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு மாநில அரசின் போதிய தடுப்பு நடவடிக்கைகளே இல்லாததுதான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என பதில் அளித்து பேசினார். முதல்வரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசவேண்டிய முதல்வர், என்னால் முடிந்தது அவ்வளவுதான்; கடவுள் தான் இனி காப்பாற்ற வேண்டும் என்கிற ரீதியில் பேசியிருப்பது அரசின் தோல்வியைக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பம் முதல் நேற்று வரை அளித்த பேட்டிகள் அனைத்தும் அரசின் அப்பட்டமான தோல்வியைக் காட்டுவதாகவே உள்ளன.

அன்று “அச்சம் வேண்டாம்”... இன்று  “கடவுளுக்குத்தான் தெரியும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பல்டிகள்!

முதல்வரின் பல்டி பேட்டிகள் பின்வருமாறு:

மார்ச் 12 - சட்டமன்றத்தில் முதல்வர் உரை..

“கொரோனா பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். 70 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் அச்சம் கொள்கிறார் போல” என கொரோனா தடுப்புப் பணிக்காக தி.மு.க வைத்த கோரிக்கையை நிராகரித்து இவ்வாறு பேசினார்.

மார்ச் 27 - கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மார்ச் 30 - தமிழகத்துக்கு இது சவாலான நேரம் - இதுபோன்ற சூழலை இதற்கு முன் தமிழ்நாடு சந்தித்தது இல்லை. “கொரோனா மிகப்பெரிய தொற்று நோய் - வல்லரசு நாடுகளிலேயே மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.

ஏப்ரல் 16 - “அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது” என்றார் முதல்வர் ஆனால் 90 நாட்களாக பாதிப்பு அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்த கருத்துக்காக தற்போது வரை தோல்வியை ஒப்புக்கொண்டு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை முதல்வர் எடப்பாடி.

அன்று “அச்சம் வேண்டாம்”... இன்று  “கடவுளுக்குத்தான் தெரியும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பல்டிகள்!

மே 13 - “தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கொரோனா பாதிப்பு அதிகமானது” என தடுப்பு நடவடிக்கை முன்கூட்டியே செய்யாமல் பழியை உழைப்பாளி மக்கள் மீது போட்டார்.

மே 29 - சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.

ஜூன் 12 - தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று வெளியான செய்தி தவறானது. பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..

ஜூன் 15 - அடுத்த இரண்டுநாள் கழித்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வரும் 19-ந் தேதி அதிகாலை 12 மணி முதல் 30-ம் தேதி இரவு 12 மணி வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டார்.

ஜூன் 20 - கொரோனாவை யாராலும் ஒழிக்க முடியாது. அதன் முடிவு கடவுளுக்குதான் தெரியும்” என்கிறார்.

கொரோனா தொற்று எப்போது தீரும் என்றால், கடவுளுக்குதான் தெரியும் என்று சொல்வதற்கு முதல்வர் எதற்கு? தனது பொறுப்பை உணர்ந்து முதல்வர் பேசவேண்டும் என பொதுமக்கள் எதிர்பாக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories