Corona Virus

“சாதி,சமயமற்ற சமத்துவபுரம் சென்னை;அதன் மக்களை நோயிடமிருந்து காக்கவேண்டியது அரசின் கடமை”- உதயநிதி அட்வைஸ்!

வந்தாரை வாழவைக்கும் சென்னையில், கொரோனாவும் வாழ்ந்துவிட்டு போகட்டும் என முதலமைச்சர் பழனிசாமி விட்டுவிட்டாரா என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக தளர்வுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்குக்கு பதிலாக நேற்று (ஜூன் 19) முதல் ஜூன் 30ம் தேதி வரையில் பொது முடக்கத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.

ஏற்கெனவே, அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதார ரீதியில் மிகவும் இன்னல்களுக்கு ஆளான மக்கள், சென்னையில் வசிக்கும் வீடுகளுக்கு வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதால் வேறு வழியின்றி சொந்த ஊருக்கே சென்றுவிடலாம் என எண்ணி மூட்டைமுடிச்சுகளுடன் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையை விட்டு வெளியே செல்லும் மக்களுக்கு தமது செயல்பாடுகள் மூலம் நம்பிக்கை அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 50 ஆயிரத்துக்கும் மேலானோரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 40 ஆயிரம் பேராக உள்ளனர் என்கிறது அ.தி.மு.க. அரசு.

ஆனால், கொரோனா தொடர்பான தமிழகத்தின் உண்மை நிலவரமோ அச்சுறுத்துகிறது. சென்னை வந்தாரை வாழவைக்கும் என்பார்கள். அதற்கேற்ப கொரோனாவும் வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என முதலமைச்சர் விட்டுவிட்டாரா என்னவோ என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சென்னை மாநகரம் வெறும் நிலப்பரப்பல்ல. சாதி, சமயமற்ற, ஏழை பணக்காரன் பேதமற்ற மாபெரும் சமத்துவபுரம் என சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், மக்களை நோயிடமிருந்து பாதுகாத்து, அகதிகளைப் போன்று வெளியேற நினைப்பவர்களுக்கு தமது செயல்பாடுகள் மூலம் நம்பிக்கை கொடுக்க வேண்டியதுமே அரசின் தலையாய கடைமையாகும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories