தமிழ்நாடு

இதுவரை காணாத உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று : தமிழகத்தில் 12 பேர் பலி... 827 பேர் பாதிப்பு! #Covid19

தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா தொற்று. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,327 ஆக உயர்வு!

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. புதிய உச்சமாக இன்று 827 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் :

“தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 8,676.

பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அச்சப்படத் தேவையில்லை. இன்று 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக 10,548 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 55%

இதுவரை காணாத உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று : தமிழகத்தில் 12 பேர் பலி... 827 பேர் பாதிப்பு! #Covid19

சென்னையில் மட்டும் இன்று 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12757 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 12,246 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 4,55,216 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 936 பேருக்கு இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முடிந்த அளவு கட்டுப்பாட்டு பணிகளை செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories