Corona Virus

இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 6 பேர் பலி - தீவிரமடையும் தாக்கம்! #Corona

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :

“தமிழகத்தில் இன்று (மே 27) 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் 11,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த எண்ணிக்கை 12,203 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் 5 பேரும், செங்கல்பட்டில் ஒருவரும் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 6 பேர் பலி - தீவிரமடையும் தாக்கம்! #Corona

இன்று ஒரே நாளில் 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,909 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 8,500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,122 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 15,796 பேரும், 60 வயதைக் கடந்தவர்கள் 1,627 பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories