தமிழ்நாடு

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் துன்பங்களை முதல்வர் அறிவாரா? - கனிமொழி எம்.பி கேள்வி?

வெளிநாடுகளில் இந்திய தமிழர்கள், கையில் பணமின்றி பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறார்கள் அவர்களை மீட்டு வர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் துன்பங்களை முதல்வர் அறிவாரா? - கனிமொழி எம்.பி கேள்வி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. மேலும், விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளன. இதனால், தாயகம் திரும்ப முடியாமல் அயல்நாடுகளில் தமிழர்கள் பலர் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரவேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்பேரில் சிறப்பு விமானங்கள் மூலம் கடந்த 7ம் தேதியிலிருந்து வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வருகிறது அரசு.

ஆனால், அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் தமிழகத்திற்கு குறைவான அளவிலியே இயக்கப்படுகிறது. இதனால், வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகளவில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில், தாயகம் திரும்ப முடியாமல் அயல்நாடுகளில் தமிழர்கள் பலர் சிக்கியுள்ளனர்.

சமீபத்தில், அயலகத் தமிழர்களோடு காணொளிக் காட்சி மூலம் உரையாடி, கோரிக்கைகளைக் கேட்டறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசை வலியுறுத்தினார்.

ஆனாலும் அதன் பிறகு தமிழக அரசு எந்த வித துரித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இதுதொடர்பாக, தமிழக அரசின் நடவடிக்கைக்கு தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவரும் விமானங்களில், நேரடியாக அதிக விமானங்கள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. முதல்வரும் தமிழகத்திற்கு விமானங்கள் வருவதை விரும்பவில்லை.

மற்ற மாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களில் தமிழர்கள் பயணித்து, போக்குவரத்து இல்லாத சூழலில் தமிழகம் திரும்ப அவர்கள் படும் துன்பங்களை முதல்வர் அறிவாரா?

மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் தங்கள் மக்களை மீட்டு வந்து, பரிசோதனைகள் செய்தல் தனிமைப்படுத்தல் என்று ஆக்கப்பூர்வமாக செயல்படுகின்றனர். வெளிநாடுகளில் இந்திய தமிழர்கள், கையில் பணமின்றி பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களை தமிழகம் மீட்டுவரவேண்டியது அரசின் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories