Corona Virus

சவுதியில் சிக்கி தவிக்கும் 150 தமிழர்கள் - தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? (Video)

கொரோனா ஊரடங்கு காரணமாக சவுதி அரேபியாவில் சிக்கித் தவித்து வரும் 140 தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. மேலும், விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளன. இதனால், தாயகம் திரும்ப முடியாமல் அயல்நாடுகளில் தமிழர்கள் பலர் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரவேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்பேரில் சிறப்பு விமானங்கள் மூலம் கடந்த 7ம் தேதியிலிருந்து வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வருகிறது அரசு.

ஆனால், அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு விமானங்கள் தமிழகத்திற்கு குறைவான அளவிலியே இயக்கப்படுகிறது. இதனால், வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகளவில் சிக்கித் தவிக்கின்றனர். அவ்வகையில் சவுதி அரேபியாவில் 150 தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

அவர்கள், தங்களை தமிழகம் அழைத்துச்செல்ல சிறப்பு விமானம் எற்பாடு செய்யுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் 150 நபர் தமிழ்நாட்டில் இருந்து சவூதி அரேபியாவிற்கு கடந்த ஜனவரி மாதம் இறுதியில் வந்தடைந்தோம்.

எங்கள் வேலை கடந்த ஏப்ரல் 15ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சவுதியும் அடங்கும்.

ஏப்ரல் 15 ஆம் தேதி வரை எங்கள் கம்பெனி எங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டது. அதன் பின் எங்கள் செலவில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. நாங்கள் தற்போது வரை எங்களிடம் உள்ள பணத்தில் தான் செலவு செய்து கொண்டுள்ளோம். ஆனால் வரும் நாட்களில் எங்களுக்கு உணவு கேள்விகுறியாகிவிடும். ஏனென்றால் எங்களிடம் உள்ள பணம் தீர்ந்துவிடும்.

மேலும் எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த 150 நபர்களையும் தாயகம் திருப்பி அனுப்ப தயார் நிலையில் உள்ளனர். நாங்கள் கடந்த ஒரு மாத காலமாக நகரின் தொடர்பு இல்லாமல் தனிமையில் தான் உள்ளோம். கடந்த இருவாரமாக இந்திய தூதரகம் வெளியிட்ட விமான பட்டியலில் சவூதியில் இருந்து எந்த விமானமும் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. ஆகவே எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து, தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories