தமிழ்நாடு

“வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு - நாளை உருவாகிறது ஆம்பன் புயல்” : வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதிகரித்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மாலை தெற்குவங்க கடல் பகுதிகளில் புயலாக வலுவடைய போகிறது.

வரும் 16ம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து பதினெட்டாம் தேதி வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல், 18, 19ஆம் தேதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அவ்வப்போது 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு - நாளை உருவாகிறது ஆம்பன் புயல்” : வானிலை ஆய்வு மையம் தகவல்!

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

தெற்கு வங்ககடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories