தமிழ்நாடு

கோவாவில் சிக்கிய  தொழிலாளர்கள் மீட்ட திமுக MLA: அரசு உதவியின்றி எடுத்த நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு! 

தமிழக அரசின் உதவியின்றி தி.மு.க எம்.எல்.ஏ முயற்சியால், கோவாவில் சிக்கித் தவித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 200 கூலித் தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

கோவாவில் சிக்கிய  தொழிலாளர்கள் மீட்ட திமுக MLA: அரசு உதவியின்றி எடுத்த நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கால் மக்கள் முடங்கிக் கிடப்பதோடு வேலையின்றி, உணவின்றியும் தவித்து வருகிறார்கள். அவ்வாறு அவதிக்குள்ளாகி வரும் ஏழை எளிய மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா என்ற செயல்திட்டத்தினை உருவாகி, அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மூலம் மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறார்.

அதுபோக, உணவு இல்லாமல் கஷ்டப்படும் வீடட்ற மக்களுக்காக நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு சாப்பாடு வழங்குவதற்காக, தமிழகத்தின் 25 முக்கிய பகுதிகளில் பிரத்யேகமாக சமையற் கூடங்கள் உருவாக்கப்பட்டு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்து வரும் தமிழர்களின் நிலை அறிந்து அவர்களையும் சொந்த ஊருக்கு அழைத்து வரும் வேளையில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.

கோவாவில் சிக்கிய  தொழிலாளர்கள் மீட்ட திமுக MLA: அரசு உதவியின்றி எடுத்த நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு! 

அந்த வகையில், கோவாவில் சிக்கித் தவித்த 200 தமிழர்கள் தி.மு.கவின் சீரிய முயற்சியால் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த 200 தொழிலாளர்கள் கோவாவில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், வாழ்வாதாரம் இன்றி சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு வந்ததை அறிந்த ரிஷிவந்தியம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் நிதியை விடுவித்து, கோவாவில் உள்ள தமிழக தொழிலாளர்களுக்கு உணவுகள் கிடைக்க வழிவகைச் செய்துள்ளார்.

கோவாவில் சிக்கிய  தொழிலாளர்கள் மீட்ட திமுக MLA: அரசு உதவியின்றி எடுத்த நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு! 

மேலும், அவர்கள் ஊர் திரும்புவதற்காக கோவா ஆட்சியை கலாவதியை தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார் வசந்தம் கார்த்திகேயன். இதையடுத்து, 2 பேருந்துகளில் சொந்த ஊர் திரும்பிய தமிழக தொழிலாளர்களை தி.மு.க. எம்.எல்.ஏவே நேரில் சென்று வரவேற்றிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், கொரோனா இல்லையென தெரியவந்ததால், அவர்கள் அனைவரும் தத்தம் கிராமத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கோவாவில் சிக்கித் தவித்த தங்களை மீட்டு கொண்டுவர உதவிப் புரிந்ததற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் எவ்வித உதவியும் இல்லாமல், தி.மு.க. எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் தாமாக முன்வந்து அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டதற்கு கள்ளக்குறிச்சி மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories