தமிழ்நாடு

மீண்டும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து - 7 பேர் படுகாயம்!

நெய்வேலியில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மீண்டும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து - 7 பேர் படுகாயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 6வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கோர தீ விபத்தின்போதி அங்கு பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தீயை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தால் அனல் மின் நிலையம் முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளது.

கடந்த மே 4ம் தேதி, நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்திலிருந்து, அனல் மின் நிலைய சேமிப்பு கிடங்குக்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories