இந்தியா

சாலையில் சுருண்டு விழும் மக்கள் : விசாகப்பட்டினம் விஷவாயு கசிவில் 6 பேர் பலி - 1000 பேர் பாதிப்பு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவினால், குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நாயுடுதோட்டா அருகே ஆர்.ஆர் வெங்கடபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘எல்.ஜி பாலிமர்ஸ் ரசாயனம்’ என்ற ரசாயன ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலை அமைக்கப்பட்டப் போதிருந்தே அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் ஆலையில் இருந்து ரசாயனக் கசிவு ஏற்பட்ட அப்பகுதி முழுவதும் பரவியுள்ளது. அதிகாலை முதல் வாயுக்கசிவால் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், மயக்கம், அரிப்பு, கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டுள்ளது.

சாலையில் சென்ற பலரும் மயக்கம் போட்டு நடுவழியிலேயே மயங்கிவிழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப்படையினர் மீட்பு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர்.

சாலையில் சுருண்டு விழும் மக்கள் 
: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவில் 6 பேர் பலி - 1000 பேர் பாதிப்பு!

இந்த வாயுக்கசிவால் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாயுக்கசிவுத் தொடர்ந்து அதிகரிப்பதால் ஆர்.ஆர் வெங்கடபுரம் பகுதியில் இருந்து, 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வாயுக்கசிவுக்கு காரணமான ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கம்படி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே கொரோனாவா பெரும் பாதிப்புகளை சந்தித்துவரும் நிலையில் இந்த வாயுக்கசிவு மேலும் பல உயிர்களை காவு வாங்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories