Corona Virus

சென்னையில் முறையான வசதி இன்றி தங்க வைக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகள் - என்ன செய்கிறது அரசு ?

தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு சரியில்லை என புகார் எழுந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது. அதில், 90 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆகையால், எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவதால், மருத்துவமனைகளில் அனுமதிக்காமல் தனியார் கல்லூரிகள், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், திருமண மண்டபங்கள் என பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

இதனால், ஆங்காங்கே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு அரசு சார்பில் மாநகராட்சி நிர்வாகம் உணவு வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சென்னையில் முறையான வசதி இன்றி தங்க வைக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகள் - என்ன செய்கிறது அரசு ?

அங்கு அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உணவுப் பொட்டலங்களில் உள்ள காகித அட்டைகள் அனைத்தும், சாப்பாட்டுடன் ஊறிப்போய் இருந்திருக்கிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கொரோனா நோயாளிகள், அதனை வழங்க வந்த அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். “நாங்களும் மனுஷங்கதான்” என வேதனையும் தெரிவித்துள்ளனர்.இதனை அங்குள்ளவர்களே வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

சென்னையில் முறையான வசதி இன்றி தங்க வைக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகள் - என்ன செய்கிறது அரசு ?

அதைத் தொடர்ந்து, நந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் நேற்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் உணவை மறுத்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் தரப்பட்டதைவிட மோசமான உணவு வழங்கப்படுவதாகவும் குளிக்கும் வசதியும் சரியாக இல்லையென்றும் கூறி நோயாளிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அதைவிட முக்கியமாக, காற்றோட்டம் இல்லாத நிலையில் தாங்கள் வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் வேதனைப்பட்டனர். இது தொடர்பாக பணியில் இருக்கும் மருத்துவத் துறையினரிடம் அவர்கள் கூறியும் ஒன்றும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர்கள் கோபமடைந்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் அப்பகுதி போலீசுக்குத் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் வந்து போராட்டம் நடத்திய நோயாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களின் பதிலால் சமாதானம் அடையாத நோயாளிகள் மேலதிகாரிகளை வரச்சொல்லி முழக்கமிட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு சீரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது என ஊடகங்களில் வாய்வழி வார்த்தையாக மட்டுமே பேசிவிட்டுச் செல்வதையே முதலமைச்சர் பழனிசாமி முழுநேர வேலையாக வைத்திருக்கிறாரா என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

banner

Related Stories

Related Stories