தமிழ்நாடு

“குழப்பம் ஏற்படுத்திய கலெக்டர் அறிக்கை - நூற்றுக்கணக்கில் குவிந்த மதுரை மக்கள்” : சு.வெங்கடேசன் ஆதங்கம்!

மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையும் காவல்துறையின் சார்பில் வெளியான ஆடியோ குரல் பதிவும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

“குழப்பம் ஏற்படுத்திய கலெக்டர் அறிக்கை - நூற்றுக்கணக்கில் குவிந்த மதுரை மக்கள்” : சு.வெங்கடேசன் ஆதங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரையில் கொரோனா பரவலைத் தடுக்க அம்மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், வாகன போக்குவரத்து அதிகரிப்பதை ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, QR Code வசதி கொண்ட வாகன அனுமதி சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சர்வர் முடங்கியதன் காரணமாக அனுமதிச் சீட்டு வாங்க மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். அப்போது மக்கள் ஒருவரை ஒருவர் முந்தியடித்துக்கொண்டு சமூக இடைவெளியின்றி குவிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது அதிகாரிகள் நேரடியாக தரமறுத்தால் அங்குவந்த நூற்றுக்காணக்கானோர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலிஸார் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியர் QR Code முறை அனுமதி சீட்டு வழங்கும் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“குழப்பம் ஏற்படுத்திய கலெக்டர் அறிக்கை - நூற்றுக்கணக்கில் குவிந்த மதுரை மக்கள்” : சு.வெங்கடேசன் ஆதங்கம்!

இதனால் அதிருப்தி அடைந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நிர்வாகத்தின் குளறுபடியை விமர்சித்திள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில், கொரோனோ தொற்று சமூகப்பரவல் நிலையை எட்டிவிட்டதோ என்று சந்தேகம் வருகின்ற அளவிற்கு நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம் ஊரடங்கை இன்னும் சிறப்பாகவும் முழுமையாகவும் அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்வதை வரவேற்கிறேன்.

ஆனால், இம்முடிவினையொட்டி நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையும் காவல்துறையின் சார்பில் வெளியான ஆடியோ குரல் பதிவும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. மதுரையில் பொதுவெளியில் சுற்றுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது உண்மைதான். அதனைக் கட்டுக்குள் கொண்டுவர சரியான முயற்சிகள் தேவை. அதனை ஒழுங்குபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் திசைதிருப்பப் பட்டுவிடக் கூடாது.

அரசுப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள், அத்தியாவசியப் பணிகளுக்கான அனுமதிபெற்றவர்கள் என சுமார் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் அன்றாடப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 90 சதவிகிதம் பேர் இருசக்கர வாகனத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். இவர்கள் அனைவரும் மறுநாள் காலை இருசக்கர வாகனத்துக்கான அனுமதியைப் பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும் என முந்தைய நாள் இரவு அறிவிப்பு வெளியிடுவது எந்தவகையில் பொருத்தமான செயல்?

“குழப்பம் ஏற்படுத்திய கலெக்டர் அறிக்கை - நூற்றுக்கணக்கில் குவிந்த மதுரை மக்கள்” : சு.வெங்கடேசன் ஆதங்கம்!

இவ்வளவு பேருக்கும் ஒரே நாளில் அனுமதி கொடுப்பதற்கான நிர்வாக ஏற்பட்டினை உறுதிசெய்யாமல், இந்த அறிவிப்பைச் செய்திருக்கக் கூடாது. அதுவும் ஆட்சியரின் அலுவலகத்திலேயே இவ்வளவு கூட்டம் கூடுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கொரோனா தொற்று சமூக பரவலாக்கம் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் செய்யப்படும் அறிவிப்புகளின் விளைவு அதற்கு எதிர்மறையான செயல்பாட்டுக்கே வழிவகுத்திருக்கிறது.

அதேபோன்று காவல்துறையின் சார்பில் செய்யப்படும் அறிவிப்புகள், முறையாக உயர் அதிகாரியால் மட்டுமே பொது ஊடகங்களில் பகிரப்பட வேண்டும்; அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் வாட்ஸ்-அப்பில் குரல்பதிவினை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை மக்களே, நாம் கொரோனோவின் சமூகப்பரவல் நிலையை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு ஊரடங்கிற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்து பொதுவெளியில் இருப்பது நிர்வாகத்துக்கு பதட்டத்தையும், அழுத்தத்தையும் உருவாக்குகிறது. அதிலிருந்துதான் அவசரமாக முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு அதிகாரிகள் தள்ளப்படுகிறார்கள். நிலைமையை புரிந்து கொண்டு முழுமையாக ஒத்துழைப்பை தாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories