தமிழ்நாடு

“ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று; பாதிக்கப்பட்டோர் 411-ஆக அதிகரிப்பு” : அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

“ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று; பாதிக்கப்பட்டோர் 411-ஆக அதிகரிப்பு” : அதிர்ச்சியில் தமிழக மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரையில், 309 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று ஒரேநாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா அறிகுறியுடன் உள்ள 1,580 பேருக்கு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3,684 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2,780 பேருக்கு பாதிப்பு இல்லை என்றும் 7 பேர் வீடு திரும்பிய நிலையில் 484 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது.

banner

Related Stories

Related Stories