தமிழ்நாடு

“தமிழகத்தை கொரோனா தொற்று பரவும் பகுதியாக அறிவிப்பு” : சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் தமிழகத்தை கொரோனா தொற்று பரவும் பகுதியாக அறிவித்தது தமிழக அரசு.

“தமிழகத்தை கொரோனா தொற்று பரவும் பகுதியாக அறிவிப்பு” : சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் 19 மாவட்டங்களில் 234 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில்,“கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிவு 76ன் படி தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோய் சட்டம் 1897ன்படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அரசு/ தனியார், அலுவலகங்கள்/மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள் மாணவ, மாணவியர் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் திரவ சோப்பு கரைசல் அல்லது கைகளை சோப்பு வைக்கப்படவேண்டும்.

“தமிழகத்தை கொரோனா தொற்று பரவும் பகுதியாக அறிவிப்பு” : சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும் வெளியில் செல்லும் முன்பும் கைகளை நன்கு கழுவிய பிறகே அனுமதிக்கவேண்டும். ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நோய் பற்றிய தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் பொது சுகாதாரத் துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறும் பட்சத்தில் அங்கீகாரம்/அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவ்வப்பொழுது முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்த்தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும். நோய்த்தொற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தப் பொது அறிவிப்பானது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897இன் கீழ் கொடுக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188 கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் இந்த பொது அறிவிப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எழுத்து மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக கருதப்படும்” என தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories