தமிழ்நாடு

10 வயது சிறுமி பாலியல் கொலை- நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நாளில் நடந்த கொடூரம்!

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அதே நாளில் சென்னையில் நடந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 வயது சிறுமி பாலியல் கொலை- நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நாளில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னையில் 10 வயது சிறுமி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் அப்பகுதியில் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு 10 வயதான பெண் குழந்தை உள்ளது.

அவர்களது வீட்டுக்கு அருகே வசிக்கும் சுரேஷ் என்பவர் அந்த 10 வயதுச் சிறுமியோடு அவ்வப்போது விளையாடுவது வழக்கம். நேற்றிரவு, இயற்கை உபாதையைக் கழிக்க வெளியே வந்த சிறுமியை அழைத்து சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அந்தச் சிறுமி சத்தம் போட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த சுரேஷ் அந்தச் சிறுமியை 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இரவில் திடீரென குழந்தையைக் காணாத நிலையில், ஸ்ரீனிவாசன் அந்த காம்பவுண்ட் முழுவதும் தேடியுள்ளார். அப்போது அண்டை வீட்டுக்காரரான சுரேஷும் அவருடன் இணைந்து தேடுவது போல பாவனை செய்துள்ளார்.

ஸ்ரீனிவாசன், குடியிருப்புப் பகுதியின் பின்புறத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த தென்னை மரம் ஒன்றின் கீழ் இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்துள்ளார் அந்தச் சிறுமி.

10 வயது சிறுமி பாலியல் கொலை- நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நாளில் நடந்த கொடூரம்!

தனது மகளை ரத்த வெள்ளத்தில் பார்த்த ஸ்ரீனிவாசன் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், முன்பே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து மதுரவாயல் காவல் நிலையத்தில் ஸ்ரீனிவாசன் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை செய்த போலிஸார், சுரேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் நிர்பயா எனும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கு நேற்றுதான் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதேநேரத்தில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெண்களையும், பொதுமக்களையும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories