தமிழ்நாடு

“ஆளில்லாமல் நடுரோட்டில் தன்னந்தனியாகச் சென்ற ஆட்டோ” : ஓட்டுநருக்கு நேர்ந்த அவலம் - அதிர்ச்சி தகவல்! VIDEO

ஓட்டுநர் இல்லாமல் சாலையில் சிறிது தூரம் ஆட்டோ சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சென்னை தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் தாம்பரத்தில் இருந்து சவாரி ஏற்றிக்கொண்டு சென்னைக் கொரட்டூரில் இறக்கிவிட்டு தாம்பரத்திற்த் திரும்பியுள்ளார்.

அப்போது மதுரவாயல் 200 அடி சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது தீடிரென அவருக்கு மாடைப்பு ஏற்பட்டு ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்துள்ளார். இதனால், ஆட்டோ சிறிது தூரம் ஆளில்லாமலேயே கட்டுப்பாட்டை இழந்து சென்றுள்ளது. இதனைக்கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்தக் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories