தமிழ்நாடு

“டொரினாவா... கொரோனாவா..?” - வைரஸையே வீம்பாகக் கலாய்க்கும் வடிவேலு!

நான் கட்சி அரம்பித்தால் வனவில் வண்ணத்தில் கொய்யாப்பழம் சின்னம் வைத்து ஒரு கட்சியை துவங்கி விடுவேன் என நடிகர் நகைச்சுவையாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“டொரினாவா... கொரோனாவா..?” - வைரஸையே வீம்பாகக் கலாய்க்கும் வடிவேலு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தொடர்ச்சியாக படங்களில் நடிக்காவிட்டாலும், தமிழகத்தில் இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்களால் கொண்டாடப்படும் நடிகர் வடிவேலு. அவரது பேட்டிக்காக ரசிகர்களும், ஊடகத்தினரும் எப்போதுமே காத்திருப்பார்கள். அதற்குக் காரணம் அவரது ‘கலகல’ நகைச்சுவைப் பேச்சுதான்.

அந்தவகையில் நேற்றைய தினம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நடிகர் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து அவர் பேசியது வைரலானது.

இந்நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் வடிவேலு. அந்தச் சந்திப்பின் போது நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது ரஜினி மூலமாக அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு இனி அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றார்.

“டொரினாவா... கொரோனாவா..?” - வைரஸையே வீம்பாகக் கலாய்க்கும் வடிவேலு!

மேலும், ஒருவேளை கட்சி அரம்பித்தால் வானவில் வண்ணக் கொடியும், கொய்யாப்பழ சின்னமும் கொண்டு ஒரு கட்சியை துவக்கிவிடலாம் என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

கொரோனா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நமக்கு எந்த நோயும் வராது. அதற்குக் காரணம் நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைதான். அதேபோன்று உணவுப் பழக்கத்தை நாமும் கடைபிடிக்கவேண்டும். அதனைக் கடைபிடித்தாலே ‘டொரினாவோ கொரோனாவோ’ எதுவும் வராது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories