சினிமா

“ரஜினி அரசியலுக்கு வருவாரானு அவருக்கே தெரியாது” - வடிவேலு கலகல பேட்டி! (வைரல் வீடியோ)

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவாரா இல்லையா என்பது அவருக்கே தெரியாது என வடிவேலு பேசியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனது அரசியல் பிரவேசம் குறித்து நேற்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுபோக, மக்கள் மத்தியில் எழுச்சி வரட்டும் அப்போது வருகிறேன் என ரஜினி பேசியிருந்தது நெட்டிசன்களிடையே மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, ரஜினியின் அரசியல் குறித்துப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், “ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா இல்லையா என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, ஏன் அவருக்கே தெரியாது. அவர் வரும்போது பார்க்கலாம்.” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “நான் என் திட்டத்தை சொல்லட்டுமா? 2021ல் நான் சி.எம்.ஆகலாம்னு பிளான் பண்ணிருக்கேன். நான் எங்க இருந்தாலும் எனக்கு ஓட்டு போடுவீங்களா?” என கலகலப்பாக பேசிச் சென்றிருக்கிறார்.

முன்னதாக, என் திரைவாழ்வை யார் கெடுத்தாலும் எனக்கு கவலையில்லை என்று அவருக்கே உரிய கிண்டலான தொனியில் பேசியுள்ளார். ரஜினியின் பேச்சை விட வடிவேலுவின் இந்தப் பேச்சுதான் தற்போது நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories