அரசியல்

“மீன் குழம்பு சட்டியில் சர்க்கரைப் பொங்கல்” - ’பாபா’ கதை சொல்லி ரசிகர்களுக்கு ‘பெப்பே’ காட்டிய ரஜினி !

ரஜினியின் அரசியல் பிரவேசம் விரைவில் நிகழ்ந்துவிடும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு அவரது இன்றைய பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடிகர் ரஜினிகாந்த் கால் நூற்றாண்டு காலமாக அரசியல் பிரவேசம் குறித்த கருத்துகளைத் தெரிவித்து வந்தாலும் கடந்த 2017ம் ஆண்டு முதல் மிகத் தீவிரமாக அரசியலுக்கு வருவது குறித்துப் பேசி வருகிறார்.

போர் வரும்போது வருவேன் என ரஜினி சொன்னதற்குப் பிறகு பல்வேறு போராட்டங்களும் சிலபல தேர்தல்களும் கூட நடந்து முடிந்துவிட்டன. ஆனால், ரஜினி தொடர்ந்து அவரது ரசிகர்களுக்கு பிடிகொடுக்காமல் பேசிவருகிறார்.

இதற்கிடையே, பா.ஜ.க அரசின் மக்கள் விரோத சட்டதிட்டங்களுக்கு ஆதரவளித்து மக்களின் கடுமையான எதிர்ப்பையும் சம்பாதித்தார். அவரது கருத்து புரிந்துகொள்ளப்பட்ட விதத்திற்கு மறுப்புத் தெரிவிக்கவும், வருத்தம் தெரிவிக்கவுமே செய்தியாளர்களை அதிகமாகச் சந்தித்து வந்தார்.

அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நிர்வாகிகளுடன் கூடி ஆலோசனைகளும் நடத்தினார் ரஜினி. இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடவிருப்பதாக பத்திரிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

“மீன் குழம்பு சட்டியில் சர்க்கரைப் பொங்கல்” - ’பாபா’ கதை சொல்லி ரசிகர்களுக்கு ‘பெப்பே’ காட்டிய ரஜினி !

அதன்படி, இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ரஜினி, “கட்சி வேறு; ஆட்சி வேறு. கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு வேறொரு தலைமையும் இருக்கவேண்டும். இதை எல்லோரிடமும் கொண்டு சேருங்கள். அப்புறம் நான் அரசியலுக்கு வருகிறேன். தேர்தல் வரைதான் கட்சிப் பதவிகள் இருக்கும். அதன்பிறகு கட்சிப் பதவிகள் நீக்கப்படும்.” எனப் பேசியுள்ளார்.

மேலும், “சிஸ்டமை சரி செய்யாமல் அரசிலுக்கு வரக்கூடாது. அப்படி வந்தால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் கழுவாமல் சர்க்கரைப் பொங்கல் வைப்பது போல் ஆகிவிடும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் விரைவில் நிகழ்ந்துவிடும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு அவரது இன்றைய பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் குழப்பமான மனநிலையில் குழப்பமான கருத்துகளையே பேசி வருவதாக தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories