தமிழ்நாடு

“காங்கிரஸ் ஆட்சியில் பா.ஜ.க எம்.பி.,க்கள் செய்த அட்டகாசங்கள்”- பட்டியலிட்ட கே.எஸ்.அழகிரி!

மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய அரசுக்கு இருந்த பக்குவம், இப்போதுள்ள மத்திய அரசுக்கு கிடையாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

“காங்கிரஸ் ஆட்சியில் பா.ஜ.க எம்.பி.,க்கள் செய்த அட்டகாசங்கள்”-  பட்டியலிட்ட கே.எஸ்.அழகிரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமைதியாகப் போராட்டம் நடத்துபவர்கள் மீதான கருத்துகளை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, “நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது முறையானது அல்ல. இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லலாம். எதிர்ப்புகளைத் தெரிவிக்கலாம் என்பதுதான் சிறப்பானதாகும்.

ஆனால் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை வெளியேற்றுவது என்பது பொறுமைபின்மைக்கு எடுத்துக்காட்டாகும். மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் பா.ஜ.க செய்யாத அட்டகாசங்கள் கிடையாது. நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் விவாதத்தில் பேசும்போது பா.ஜ.க உறுப்பினர்கள் காகிதங்களைக் கிழித்தெறிந்தனர்.

“காங்கிரஸ் ஆட்சியில் பா.ஜ.க எம்.பி.,க்கள் செய்த அட்டகாசங்கள்”-  பட்டியலிட்ட கே.எஸ்.அழகிரி!

அப்போது கூட பா.ஜ.க உறுப்பினர்களை வெளியேற்றவில்லை. அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் காங்கிரஸுக்கு இருந்தது. அந்தப் பக்குவம் இப்போது உள்ள மத்திய பா.ஜ.க அரசுக்கு இல்லாததற்கு வருத்தப்படுகிறேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்து நீதிமன்றம் தன்னுடைய கருத்தை பரிசீலிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு முறையும் வருவாய் துறை, காவல்துறையிடம் சென்று நிற்க முடியாது.

அவர்களுடைய பகுதியில் அமைதியாக போராட்டம் நடத்துகின்றனர். அந்த உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். வண்ணாரப்பேட்டையில் பெண்கள் யாருக்கும்இடையூறாக இல்லாமல் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories