India

#LIVE | 7 பேர் சஸ்பெண்ட்; நாடாளுமன்ற வளாகத்தில் காங். ஆர்ப்பாட்டம் - மாநிலங்களவை 11ம் தேதிவரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு 5வது நாளாக இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் மாநிலங்களவை 11-ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

#LIVE | 7 பேர் சஸ்பெண்ட்; நாடாளுமன்ற வளாகத்தில் காங். ஆர்ப்பாட்டம் - மாநிலங்களவை 11ம் தேதிவரை ஒத்திவைப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
6 March 2020, 06:21 AM

நாடாளுமன்றம் முடங்குவதைத் தடுக்க வேண்டும்! - வெங்கையா நாயுடு.

அரசும் எதிர்கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நாடாளுமன்றம் முடங்குவதைத் தடுக்க வேண்டும்.

- மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்.

6 March 2020, 05:52 AM

மாநிலங்களவை 11-ம் தேதிவரை ஒத்திவைப்பு!

6 March 2020, 05:51 AM

சஸ்பெண்ட் விவகாரத்தை காங்கிரஸ் கட்சியோடு இணைந்து மற்ற எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளனர்.

6 March 2020, 05:49 AM

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

#LIVE | 7 பேர் சஸ்பெண்ட்; நாடாளுமன்ற வளாகத்தில் காங். ஆர்ப்பாட்டம் - மாநிலங்களவை 11ம் தேதிவரை ஒத்திவைப்பு

டெல்லி வன்முறைக்கு விவாதம் நடந்த கோரிய குரல் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டத்தைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுவருகின்றனர்.

5 March 2020, 09:53 AM

தமிழக எம்.பி உட்பட மக்களவையிலிருந்து 7 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

டெல்லி வன்முறைக்கு விவாதம் கோரி மக்களவையில் அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி உட்பட மக்களவையிலிருந்து 7 எம்.பிகளை நடப்பு பட்ஜெட் தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயர் உத்தரவு.

5 March 2020, 08:17 AM

தொடர்ந்து 4-வது நாளாக முடங்கிய மாநிலங்களவை!

டெல்லி வன்முறை, கொரோனா பற்றி விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி-க்களின் அமளி காரணமாக மாநிலங்களவை தொடர்ந்து 4-வது நாளாக முடங்கியது.

5 March 2020, 04:31 AM

டெல்லி வன்முறை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கட்சிகள் இன்றும் நோட்டீஸ்.

11, 12 தேதிகளில்தான் விவாதிக்க முடியும் என்று மத்திய அரசு பிடிவாதம்

5 March 2020, 03:41 AM

எதிர்க்கட்சிகள் தீர்மான நோட்டீஸ்!

டெல்லி வன்முறை விவகாரம் தொடர்பாக விவாதிக்க மாநிலங்களவையை ஒத்திவைக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தீர்மான நோட்டீஸ்!

4 March 2020, 07:00 AM

மக்களவை ஒத்திவைப்பு!

டெல்லி வன்முறை விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு!

4 March 2020, 06:58 AM

மத்திய அரசு விளக்கமளிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) எதிர்த்து ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் (UNHCR) உச்சநீதிமன்றத்தில் வழக்கு: சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குத் தலைகுனிவு. மத்திய அரசு விளக்கமளிக்க வலியுறுத்தி ரவிக்குமார் எம்.பி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல்!

3 March 2020, 09:00 AM

வங்கிகள் திருத்த சட்டத்தை கிழித்து வீசி அமளி!

3 March 2020, 09:00 AM

அமித்ஷா பதவி விலக கோரி மக்களவையில் எதிர்கட்சிகள் கடும் அமளி!

3 March 2020, 06:22 AM

இரண்டாவது நாளாகவும் நாடாளுமன்றம் முடங்கியது.

இருக்கையை விட்டு அகன்றாலோ, மையப்பகுதிக்கு வந்தாலோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் - மக்களவை சபாநாயகர் எச்சரிக்கை.

இரண்டாவது நாளாகவும் நாடாளுமன்றம் முடங்கியது.

3 March 2020, 05:38 AM

அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பு!

டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

3 March 2020, 03:11 AM

டெல்லி வன்முறை வெறியாட்டத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்!

டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுத்தி இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தை முடக்க எதிர்கட்சிகள் திட்டம்.

நாடாளுமன்றத்துக்குள் காங்கிரஸ் பெண் எம்.பியை தாக்கிய பா.ஜ.க எம்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளனர்.

2 March 2020, 11:08 AM

மக்களவை நாள் முழுதும் ஒத்திவைப்பு.

2 March 2020, 09:21 AM

அமித்ஷா ராஜினாமா கோரி எதிர்கட்சிகள் கடும் அமளி!

அவை மீண்டும் கூடியதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் கடும் அமளி. உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா கோரியும், டெல்லி கலவரம் குறித்தும் விவாதிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்கள்.

இதனையடுத்து இரு அவைகளும் மூன்று மணிநேரம் வரை ஒத்திவைப்பு.

2 March 2020, 06:32 AM

டெல்லி கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

டெல்லி கலவரத்தை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் கருப்புத் துணியால் கண்களைக்கட்டி நாடாளுமன்றத்தில் காந்தி சிலை எதிரே ஆர்ப்பாட்டம். ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#LIVE | 7 பேர் சஸ்பெண்ட்; நாடாளுமன்ற வளாகத்தில் காங். ஆர்ப்பாட்டம் - மாநிலங்களவை 11ம் தேதிவரை ஒத்திவைப்பு
2 March 2020, 06:31 AM

ராஜ்யசபா ஒத்திவைப்பு!

டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

2 March 2020, 05:48 AM

மக்களவை ஒத்திவைப்பு!

டெல்லி வன்முறையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பியதால் அமளி.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை ஒத்திவைப்பு!

2 March 2020, 05:48 AM

எதிர்கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. குடியுரிமை சட்டம், என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி, டெல்லி வன்முறை தொடர்பாக பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சியினர் முடிவுசெய்துள்ளனர்.

மேலும், டெல்லி வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories