தமிழ்நாடு

“மாணவர்களே.. ! FIR போட்டா உங்க வாழ்க்கையே போய்டும்.. அதனால.. ” - CAA சட்டத்தை ஆதரித்து பேசிய ரஜினி !

தேசிய மக்கள்தொகை பதிவேடு அவசியம் தேவை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

“மாணவர்களே.. ! FIR போட்டா உங்க வாழ்க்கையே போய்டும்.. அதனால.. ” - CAA சட்டத்தை ஆதரித்து பேசிய ரஜினி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேசிய மக்கள்தொகை பதிவேடு அவசியம் தேவை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த், மக்கள் விரோத பா.ஜ.க அரசுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்திய அளவிலும், தமிழகத்திலும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கட்தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் சூழலில் அதற்கு ஆதரவாகப் பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :

“தேசிய மக்கள்தொகை பதிவேடு அவசியம் தேவை. மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். இந்தக் கணக்கெடுப்பால் யாருக்கும் பாதிப்பு இல்லை.

“மாணவர்களே.. ! FIR போட்டா உங்க வாழ்க்கையே போய்டும்.. அதனால.. ” - CAA சட்டத்தை ஆதரித்து பேசிய ரஜினி !

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பொய்ச் செய்திகள் பரப்பப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என அரசியல் கட்சியினரால் பீதி கிளப்பப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை.

மாணவர்கள் தீர ஆராய்ந்து உங்கள் பேராசிரியர்களிடமும் பெரியவர்களிடம் கேட்டறிந்து போராடுங்கள். இல்லையெனில் உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள். உங்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தால் உங்கள் வாழ்க்கையே போய்விடும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ள ரஜினிகாந்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories