தமிழ்நாடு

நெடுஞ்சாலைத் துறையும் தனியார் மயம்? வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியுள்ளார் நிதியமைச்சர் - தயாநிதி மாறன் சாடல்!

TNPSC முறைக்கேட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என தி.மு.க. மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறையும் தனியார் மயம்?  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியுள்ளார் நிதியமைச்சர் - தயாநிதி மாறன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தி.மு.க. சார்பில் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையின் மண்ணடி பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில், தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் எனக் கூறியுள்ளார் ராஜேந்திர பாலாஜி. அ.தி.மு.கவின் அமைச்சரவையில் உள்ள நிலோஃபர் கபில் தீவிரவாதியா என கேள்வி எழுப்பினார்.

நெடுஞ்சாலைத் துறையும் தனியார் மயம்?  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியுள்ளார் நிதியமைச்சர் - தயாநிதி மாறன் சாடல்!

பா.ஜ.கவை விட அதன் அடிமை அ.தி.மு.க அமைச்சர்களே இவ்வாறு பேசி வருவது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார். மேலும், மக்களவை ஏமாற்றும் பட்ஜெட்டாக மத்திய நிதிநிலை அறிக்கை உள்ளது.

நெடுஞ்சாலைத் துறையை தனியார் மயமாக்குவோம் என்ற பெரிய அறிவிப்பை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் என தயாநிதி மாறன் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக, TNPSC தேர்வு முறைகேட்டு வழக்கில் அமைச்சர் ஜெயக்குமார் அமைதியாக இருக்க, இருக்க அவர் மீது சந்தேகம் எழுகிறது. ஆகையால் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று தார்மீக ரீதியில் அமைச்சர் பதவியை ஜெயக்குமார் ராஜினாமா செய்யவேண்டும் அல்லது டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories