தமிழ்நாடு

“+1 படிக்கும்போதே கல்யாணம்”- தொலைநிலைக் கல்வியில் டிகிரி முடித்து டி.எஸ்.பி பணிக்கு தேர்வான சிவகாசி பெண்!

சிவகாசியை சேர்ந்த பெண் ஒருவர், பள்ளிக் கல்வியை தொடர முடியாத நிலையில், தொலைநிலைக் கல்வியில் படித்து TNPSC குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று டி.எஸ்.பி பணிக்கு தேர்வாகியுள்ளார்.

“+1 படிக்கும்போதே கல்யாணம்”- தொலைநிலைக் கல்வியில் டிகிரி முடித்து டி.எஸ்.பி பணிக்கு தேர்வான சிவகாசி பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பள்ளிக் கல்வியை தொடர முடியாத நிலையில், தொலைநிலைக் கல்வியில் படித்து TNPSC குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று டி.எஸ்.பி பணிக்கு தேர்வாகியுள்ளார் சிவகாசியைச் சேர்ந்த பெண்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள மல்லி ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகள் காமாட்சி. இவர் கடந்த 2005-ம் ஆண்டு பிளஸ் 1 படித்தபோதே இவருக்கு திருமணம் நடைபெற்றதால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை.

தனது விருப்பத்தாலும், விடாமுயற்சியாலும் 2013-ம் ஆண்டு தனித் தேர்வராக பிளஸ் 2 தேர்வு எழுதி 1,070 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார் காமாட்சி. இதையடுத்து, அரசுப் பணியை அடைவதை லட்சியமாகக் கொண்டு படித்து வந்தார்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் 2014-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற இவர், மதுரை வேளாண் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது குரூப்- 1 தேர்வில் ஒரே முயற்சியில் வெற்றி பெற்று டி.எஸ்.பி பணிக்கு தேர்வாகி உள்ளார்.

“+1 படிக்கும்போதே கல்யாணம்”- தொலைநிலைக் கல்வியில் டிகிரி முடித்து டி.எஸ்.பி பணிக்கு தேர்வான சிவகாசி பெண்!

இதுகுறித்து பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள காமாட்சி, “எனது கணவர் பட்டாசு முகவர். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பணிக்குச் சென்றுகொண்டே தொலைநிலைக் கல்வியில் பி.ஏ தமிழ் இலக்கியம் முடித்தேன்.

கடந்த ஓராண்டாக குரூப் 1 எழுதுவதற்காக பயிற்சி மையத்தில் பயின்றேன். 2019-ல் நடந்த குரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் ஒரே முயற்சியில் வெற்றிபெற்றேன். காவல் துறையில் டி.எஸ்.பியாக தேர்வானது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட எங்களது கிராமத்தினர் பெருமைப்பட்டனர்.

பெண் என்பதால் கிராமத்திலுள்ள பெண்களின் பிரச்னைகளை நன்கு அறிவேன். பெண்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக டி.எஸ்.பி பணியைத் தேர்ந்தெடுத்தேன். பார்வையற்றோருக்கு நல்ல கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எனது லட்சியம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories