தமிழ்நாடு

கிளுகிளுப்பு காட்டி CAA-வுக்கு மிஸ்டு கால் ஆதரவு திரட்ட பா.ஜ.க-வின் கீழ்த்தரமான செயல்

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிப்போர் மிஸ்ட் கால் கொடுங்கள் என்று கூறிய பா.ஜ.க., அந்த போன் நம்பரை ஒரு பெண் தொலைப்பேசி நம்பர் என பொய்யாக பரப்பி வருகிறது.

கிளுகிளுப்பு காட்டி CAA-வுக்கு மிஸ்டு கால் ஆதரவு திரட்ட பா.ஜ.க-வின் கீழ்த்தரமான செயல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் மக்களை ஏமாற்ற நினைத்து அவ்வப்போது அம்பலப்படுவது வழக்கம்.

பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும், இந்துத்வா கருத்துகளுக்கும் எதிராக, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயத்தில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பல் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் அடிக்கடி பொய் செய்திகளை பரப்பியும், அவதூருகளை பரப்பியும் ட்ரெண்ட் செய்வார்கள். அதன்படி சமீபத்தில் கூட, குடியுரிமை திருத்தச் சட்டம் CAA வுக்கு பதிலா CCA எனக் குறிப்பிட்டு ட்ரண்ட் செய்து அசிங்கப்பட்டனர்.

அது பிழை என்று கூட தெரியாமல், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எச்.ராஜா போன்றோர்களும் பதிவிட்டு பகிர்ந்தனர்.

கிளுகிளுப்பு காட்டி CAA-வுக்கு மிஸ்டு கால் ஆதரவு திரட்ட பா.ஜ.க-வின் கீழ்த்தரமான செயல்

இதனையடுத்து குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் மிஸ்டு கால் கொடுங்கள் என்று ஒரு போன் நம்பரை அறிமுகபடுத்தினார்கள். பா.ஜ.க இந்தியாவிலேயே பெரிய கட்சி என்ற கூறி கொள்வதற்கு, அடித்தளமாக அமைந்ததே இந்த மிஸ்ட் கால் முறையே.

அதையே மீண்டும் கையில் எடுத்துக்கொண்ட பா.ஜ.க, மிஸ்ட் கால் கொடுக்கச் சொல்லி விளம்பரம் செய்ததோடு விட்டுவிடாமல் அதை பரப்புவதற்கு சில கீழ்தரமான முறைகளை கையில் எடுத்துள்ளது.

ட்விட்டரில் சில பா.ஜ.க ஆதரவாளர்கள் அந்த போன் நம்பரை பதிவிட்டு, இது ஒரு பெண்ணின் போன் நம்பர் பயன்படுத்திக் கொளுங்கள் என பகிர்ந்துள்ளனர். இதே முறையை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி மிஸ்டு கால் கொடுக்க வைக்கும் கீழ்தரமான வேலையில் பா.ஜ.க ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories