தமிழ்நாடு

"தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் இன்னும் இழுத்தடிப்பது ஏன்?”- தேர்தல் ஆணையரிடம் தி.மு.க மீண்டும் முறையீடு!

கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருப்பது குறித்து தேர்தல் ஆணையரை சந்தித்து தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு புகாரளித்துள்ளார்.

"தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் இன்னும் இழுத்தடிப்பது ஏன்?”- தேர்தல் ஆணையரிடம் தி.மு.க மீண்டும் முறையீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருப்பதால் மாநில தேர்தல் ஆணையரிடம் தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு புகாரளித்துள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், கழக நிர்வாகிகளும் நேற்று நள்ளிரவு நேரத்தில் தேர்தல் ஆணையரைச் சந்தித்து தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது தொடர்பாகவும், அ.தி.மு.கவின் முறைகேடுகள் தொடர்பாகவும் புகாரளித்துவிட்டு சென்றோம்.

அதற்கு பிறகும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதமாகி வருகிறது. ஒரு சில இடங்களிலும் தி.மு.க வெற்றி உறுதியான போதும் அறிவிக்கப்படாமலே உள்ளது.

"தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் இன்னும் இழுத்தடிப்பது ஏன்?”- தேர்தல் ஆணையரிடம் தி.மு.க மீண்டும் முறையீடு!

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று இரவு முடிவடைந்திருக்கிறது. ஆனால் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதால் இதுவரை முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.

அதேபோல, முதுகுளத்தூர் பகுதியில் 10வது வார்டில் 3,420 வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் வெறும் 3,020 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 400 வாக்குகள் அடங்கிய பெட்டி காணாமல் போயுள்ளது.

கரூர் பரமத்தி ஒன்றியத்திலும், திருவள்ளூர் பொன்னேரி ஒன்றியத்திலும் நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பிறகும் இதுவரையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொடுக்காமல் காலம்தாழ்த்தி வருகின்றனர்.

ஏற்கெனவே தலைவர் மு.க.ஸ்டாலின் இருமுறை வந்து தேர்தல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல நிர்வாகிகளான நாங்களும் பலமுறை நேரடியாக புகார் கொடுத்தும், கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளோம்.

"தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் இன்னும் இழுத்தடிப்பது ஏன்?”- தேர்தல் ஆணையரிடம் தி.மு.க மீண்டும் முறையீடு!

இத்தனை புகார்களும், கோரிக்கைகளும் கொடுத்த பின்னரும் அதன் மீது நடவடிக்கை இல்லாமல் தேர்தல் ஆணையம் பாராமுகமாகச் செயல்படுகிறது. இது தொடர்பாக ஆணையரிடமே நேரடியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளான எங்களை விட மக்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழந்துள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறு நடைபெறும் ஒவ்வொரு வாக்கு எண்ணும் பகுதிகளிலும் புகார் மனு கொடுக்கச் சொல்லி மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புகார் மனுக்களின் நகல்கள் அனைத்தும் நீதிமன்றத்திலும் சமர்பிக்கப்பட்டு வாதிடப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை.

நேரடி மட்டுமல்லாமல் வரக்கூடிய மறைமுக உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க வெற்றிபெறும். ” என டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories