தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர் உயிரிழப்பு : பெரம்பலூரில் சோகம்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வானவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர் உயிரிழப்பு : பெரம்பலூரில் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற 72 வயதான மணிவேல் என்பவர் மரணமடைந்தார்.

ஆலத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் மணிவேல் வெற்றி பெற்றிருந்தார்.

வெற்றியடைந்ததற்கான சான்றிதழை அவர் நேற்று பெற்றிருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென மணிவேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தக வெளியாகியுள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு அவர் உயிரிழந்தது, ஆதனூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories