தமிழ்நாடு

750 அரங்குகள்.. லட்சம் தலைப்புகள்..‘வாசிப்பே விடுதலை’ என்கிற முழக்கத்தோடு ஜன.9ல் சென்னை புத்தக கண்காட்சி!

சென்னை புத்தக கண்காட்சி நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் வருகிற ஜனவரி 9ம் தேதி தொடங்குகிறது.

750 அரங்குகள்.. லட்சம் தலைப்புகள்..‘வாசிப்பே விடுதலை’ என்கிற முழக்கத்தோடு ஜன.9ல் சென்னை புத்தக கண்காட்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வந்தால், சென்னையில் புத்தகத் திருவிழா களைகட்டத் துவங்கி விடும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி வருகிற 2020 ஜனவரி மாதம் 9ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“சென்னை புத்தகக் காட்சி வந்துவிட்டது. வாசிப்புத் திருவிழா வாகை சூட.. அறிவுச் சுடர், ஒளிவிட்டுப் பிரகாசிக்க நாம் எல்லா சாலைகளையும் புத்தகக் காட்சி நோக்கி செலுத்த வேண்டும்.

வாசிப்பே விடுதலை போ! கல்வி பெறு! புத்தகத்தை கையில் எடு.. அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும்.. வாசிப்பே விடுதலை! - சாவித்ரி பாய் பூலே.

‘புத்தக வாசிப்பே’ சமூக விடுதலையின் அடையாளம்’ என்கிறார் அமர்தியாசென். ‘புத்தகம் காலத்தின் விதை நெல்’ என்று பாரதிதாசன் சொன்னாரே. மகள் பிரியதர்சினிக்கு அல்மோரா சிறையில் இருந்து கடிதம் எழுதுகிறார் நேரு. ‘தனி மனித அனுபவம் மிகக் குறுகியது.. ஒரு மலை உச்சியில் நின்று உலகையே திக்கெட்டும் காணும் அனுபவம் பெற புத்தகங்களை வாசிக்க வேண்டும்’ என்று எழுதுகிறார்.

நமது தேசியக் கவி பாரதியார் தன்னிடமிருந்த சொற்ப பணம் யாவற்றையும் தமிழ் நூல்களை வாங்கிட செலவு செய்து, வாசிப்பை விருத்தி செய்’ என வரலாற்றில் வழிகாட்டினார். 1976 முதல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இந்த அறிவு யாகத்தை, பிரமாண்ட ஞானத்திருவிழாவை நடத்தி வருகிறது.

வருகிற, ஜனவரி 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கப் போவது 43வது சென்னை புத்தகக் காட்சி ஆகும். கொல்கத்தாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பிரமாண்ட புத்தக திருவிழா இதுவே. மொத்தம் 750 புத்தக அரங்குகள். இம்முறை 100 இலக்கிய நிகழ்ச்சிகள்.. இருபது லட்சம் பேரை வரவைப்பது இலக்கு. ஆசியாவின் ஆறாவது பெரிய புத்தகத் திருவிழா நமது சென்னை புத்தகக் காட்சி ஆகும்.

750 அரங்குகள்.. லட்சம் தலைப்புகள்..‘வாசிப்பே விடுதலை’ என்கிற முழக்கத்தோடு ஜன.9ல் சென்னை புத்தக கண்காட்சி!

புத்தக வாசிப்பு எனும் சமுதாய முன்னேற்றப் படிநிலை பிரமாண்ட வேலையாக நம் முன்நிற்கிறது. இன்றைய முதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஊடகச் சிறைபட்டு சிதைந்து வருகிறது. வருங்காலத்தை வென்றெடுக்க வேண்டிய இளைய தலைமுறையோ சினிமாக் கவர்ச்சியிலும் மின் அணுக் கருவிகளிடத்தும் தன்னை இழக்கும் பலவீனத்தோடு பரிதவிக்கிறது.

மதவெறி அரசியலுக்கு தமிழகத்தைப் பலியிட்டு ரத்த ஆறுகளின் மூலம் வென்றெடுக்க மத்திய அதிகாரக் கட்டமைப்பு ஏராளமான உத்திகளுடன் சதி, சூது மற்றும் நச்சுத் திட்டங்களுடன் கார்பரேட்டுகளோடு கைகோர்த்து மண்ணின் இயற்கை வளங்களை சூறையாட சுற்றி வளைக்கிறார்கள்.

இந்தப் பொங்கல், நமது டெல்டா மக்களுக்கு துயரப் பொங்கலாகவே தொடர்கிறது. அவசர உதவி மட்டுமல்ல, புயல் நிவாரணம் புனரமைப்பு என ஒரு சுண்டு விரலை அசைக்கக்கூட மத்திய கார்பரேட் ஆதரவு காவி அரசு விரும்பவில்லை... நமது தற்போதைய ஒரே ஆறுதல் ஞானமும் கல்வியும் நயந்திட ஒன்று கூடும் சென்னை புத்தக காட்சியின் புத்தகப் பொங்கலே ஆகும்.

750 அரங்குகள்.. லட்சம் தலைப்புகள்..‘வாசிப்பே விடுதலை’ என்கிற முழக்கத்தோடு ஜன.9ல் சென்னை புத்தக கண்காட்சி!

இந்த வாசிப்பு பொங்கல், கோயில்களைவிட புத்தக சாலைகளே புனிதமானவை’ என அறிவித்தாரே வீரத் துறவி விவேகானந்தர். ‘அடுமனையில் உணவு’ சமைத்தலுக்கு கூட விடுப்பு தருவேன் எனது அறிவு மனையின் வாசிப்பு வேலை ஒருபோதும் தடை போட மாட்டேன்’ என்று ஆயிரக்கணக்கான நூல்களோடு வாழ்ந்தாரே நம் தமிழக விடிவெள்ளி மருத்துவப் புரட்சிப் பெண் முத்துலட்சுமி ரெட்டி.. பொங்கலின் சுவையை வாசிப்பாய் சமைத்து தமிழ் மண்ணைக் கரையேற்ற உறுதி ஏற்போம்.

எல்லாச் சாலைகளும் ‘வாசிப்பே விடுதலை’ என முழங்கட்டும். நந்தனம் YMCA மைதானத்தை நோக்கி.... ஜனவரி ஜனங்கள் யாவரையும் அலை அலையாய் திருப்புவோம்.

நன்றி - புத்தகம் பேசுது ஆசிரியர் குழு, தலையங்கம்.

750 அரங்குகள்.. லட்சம் தலைப்புகள்..‘வாசிப்பே விடுதலை’ என்கிற முழக்கத்தோடு ஜன.9ல் சென்னை புத்தக கண்காட்சி!

மேலும், சென்னை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச நுழைவு சீட்டுகள் வழங்கப்படும். மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்போருக்கு, இலவச அனுமதி வழங்கப்படும். ஆன்லைன் வழியாகவும் நுழைவுச்சீட்டு பெற முடியும். கண்காட்சி அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்; மைதானத்தில், ஏ.டி.எம்., மையங்கள்; அரங்குகளில், கிரெடிட் கார்டுகளின் வழியே புத்தகம் வாங்கும் வகையில், பி.ஓ.எஸ்., கருவிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருக்கும் என நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories