தமிழ்நாடு

கோரத்தாண்டவமாடிய ஆழிப் பேரலையின் 15ம் ஆண்டு நினைவு தினம் : தமிழகம் முழுக்க பொதுமக்கள் அஞ்சலி!

சுனாமியின் 15ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கோரத்தாண்டவமாடிய ஆழிப் பேரலையின் 15ம் ஆண்டு நினைவு தினம் : தமிழகம் முழுக்க பொதுமக்கள் அஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், இந்தியப் பெருங்கடலில் உருவான சுனாமி எனும் ஆழிப்பேரலை இந்தியாவின் கடலோரப்பகுதிகளில் கோரத் தாண்டவமாடியது.

இந்தோனேசியா, இந்தியா மட்டுமல்லாது மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் கடலோரப் பகுதிகளையும் தாக்கி, அங்கிருந்த மக்களை வாரிச் சுருட்டியது சுனாமி. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

சுனாமியால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய பகுதிகள் கடுமையான சேதங்களைச் சந்தித்தன. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியது.

கோரத்தாண்டவமாடிய ஆழிப் பேரலையின் 15ம் ஆண்டு நினைவு தினம் : தமிழகம் முழுக்க பொதுமக்கள் அஞ்சலி!

இன்று சுனாமியின் 15ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தங்கள் சொந்தங்களை சுனாமியால் இழந்த மக்கள், கடற்கரைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். கடலில் பால் ஊற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், இன்று நாகை, கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லாமல் துக்கம் அனுஷ்டித்து வருகின்றனர்.

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுதர்சனம் ஆலோசனைப்படி இன்று சுனாமி நினைவு தினத்தில், ஆழிப்பேரலையால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, செந்தில் குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடலூர் நகர தி.மு.க சார்பில் 15ம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி நகர செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு முன்னிலையில் நகர கழகத்தினர் கடலூர் சில்வர் பீச்சில் உள்ள நினைவுத் தூண் அருகில் மலர் அஞ்சலி வைத்து மரியாதை செலுத்தினர்.

banner

Related Stories

Related Stories