தமிழ்நாடு

சுங்கச்சாவடிகளில் நிகழும் ‘கட்டண கொள்ளை’ : கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம்! - அதிர்ச்சி தகவல்!

தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் கோடிக்கணக்கில் நிலுவைத் தொகை மற்றும் அபராதம் கட்டாமல் இழுத்தடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுங்கச்சாவடிகளில் நிகழும் ‘கட்டண கொள்ளை’ : கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம்! - அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 540 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 71 சுங்கச்சாவடிகளும், உத்தர பிரதேசத்தில் 62 சுங்கச்சாவடிகளும், தமிழ்நாட்டில் 47 சுங்கச்சாவடிகளும் உள்ளன. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்த விவரம் நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை.

கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணிகள், ஊதிய விவரங்கள் ஆகியவை சமீபத்தில் நடைபெற்ற பணிகள் வரை ஊரக வேலைவாய்ப்பு திட்ட இணையதளத்தில் இருக்கும் நிலையில், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் தொகை மற்றும் பிற தகவல் விவரங்கள் எதுவும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெறவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் பல மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஒப்பந்தத்தில் உள்ள விதிகளுக்குப் புறம்பாக செயல்படுவதாகவும், அதில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் நிகழும் ‘கட்டண கொள்ளை’ : கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம்! - அதிர்ச்சி தகவல்!

மேலும், விதி மீறலுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விதித்துள்ள அபராதத் தொகையை சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் செலுத்துவதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

அதன்படி, சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில், தமிழகத்தில் திண்டிவனம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியை ஒப்பந்தம் எடுத்துள்ள எம்.இ.பி (MEP) ஒப்பந்த நிறுவனம் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு வாரந்தோறும் செலுத்தவேண்டிய கட்டண பாக்கி மற்றும் அபராதத் தொகையான 6,68,39,358 ரூபாயை செலுத்தாமல் இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய தெரிவித்துள்ளது.

அதன் விவரங்கள் தொடர்பான அறிக்கை ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உதாரணமாக தாம்பரம் முதல் திண்டிவனம் வரை உள்ள 92 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க இந்த இரு சுங்கசாவடிகளும் வேன் மற்றும் காருக்கு சுங்கக் கட்டணம் 115 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

சுங்கச்சாவடிகளில் நிகழும் ‘கட்டண கொள்ளை’ : கண்டுகொள்ளாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம்! - அதிர்ச்சி தகவல்!

ஆனால் நெடுஞ்சாலை ஆணையம் 1 கிலோ மீட்டருக்கு 65 பைசா எனில் 92 கிலோ மீட்டருக்கு 59.80 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால் இவர்கள் கூடுதல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

அதேபோல், இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் ஒருநாளைக்கு 95,290 வாகனங்கள் கடப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் நாள் ஒன்றுக்கு தோராயமாக 52,40,950 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் முறையாக கண்காணிக்கத் தவறுவதும், கட்டண கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதுமே காரணங்கள் என்றும், அதற்காக அதிகாரிகள் ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories