தமிழ்நாடு

சுங்கச் சாவடி கட்டண உயர்வு ஒரு பகல் கொள்ளை : மக்கள் நலனைக் கொல்லும் செயல் என மு.க ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

சுங்கச் சாவடி கட்டண உயர்வு ஒரு பகல் கொள்ளை : மக்கள் நலனைக் கொல்லும் செயல் என மு.க ஸ்டாலின் கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்க மொத்தம் 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல சாலைகளில் சேதமடைந்து உள்ள நிலையில், தேவையான வசதிகள் ஏற்படுத்தாமல் சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்தி வருகிறது.

இந்நிலையில் அவற்றில் 15 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கக்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

போகலுார், எலியார்பதி, கொடை ரோடு, மணவாசி, மொரட்டாண்டி, விக்கிரவாண்டி, மேட்டுப்பட்டி, நாதக்கரை, ஓமலுார், வைகுண்டம், பாளையம், சமயபுரம், செங்குறிச்சி, திருமாந்துறை, திருப்பராய்துறை, வாழவந்தான் கோட்டை வீரசோழபுரம், வேலன்செட்டியூர், விஜயமங்கலம், ராசம்பாளையம் ஆகிய 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தச் சுங்கச் சாவடிகளில் 5 முதல் 15 ரூபாய் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் இந்தக் கட்டணம் வேறுபடும். சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள், பயணியர் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சுங்கக்கட்டண உயர்வுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''நடுத்தர வர்க்கத்தினரையும், வணிகர்களையும் பெரிதும் பாதிக்கும் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது. அடிப்படை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தாமல் கட்டணத்தை ரகசியமாக உயர்த்துவது அரசின் பகல் கொள்ளை. சுங்கச் சாவடிகள் மக்களின் நலனை சாகடிப்பதாக இருக்கக் கூடாது'' எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories