தமிழ்நாடு

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் : துப்புரவு பணியாளர் வேலைக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பம்!

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் வேலைக்கான நேர்காணலுக்கு பொறியியல் பட்டதாரிகளும் வந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் : துப்புரவு பணியாளர் வேலைக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்புரவு பணியாளர் வேலைக்கு மாநகராட்சி நிர்வாகம் விண்ணப்பங்களைப் பெற்றது. அதன் படி 549 இடங்களுக்கு 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தது பெரும் அதிர்ச்சியை மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் விண்ணப்பங்களை அனுப்பியவர்களுக்கு நேற்றைய தினம் நேர்காணல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்காவ வந்தவர்களை விண்ணப்பங்களில் உள்ள கல்வி தகுதி அடிப்படையில் தனி தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அழைப்பு கடிதம் வந்தவர்களுக்கு தனித்தனியாக நேர்காணல் நடைபெற்றது.

இந்த வேலைக்கு குறைந்தபட்ட வயது 21 முதல் அதிகபட்சம் வயது 56 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 25 வயது உள்ளவர்கள் முதல் 40 உள்ளவர்கள் அதிகமாக வந்திருந்தனர். அதேப்போல் துப்புரவு பணிக்கான கல்வி தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் : துப்புரவு பணியாளர் வேலைக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பம்!

ஆனால், வந்தவர்களில் 70 சதவீதம் பேர் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தனர். அதிலும் 50 சதவீதத்திற்கு மேல் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகள், பட்டமேற்படிப்பு படித்தவர்கள், இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் வந்திருந்தனர்.

விண்ணப்பங்களை வந்தவர்களில் பலருக்கு நேர்காணல் நடைபெறாததால் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.

நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலை இன்றி தவித்துவருகின்றனர். குறிப்பாக அதிக படிப்பு படித்த பட்டதாரி இளைஞர்கள் கூட குறைவான சம்பளத்திற்கு கிடைத்த வேலையை பார்க்கும் அவல நிலை உருவாகியுள்ளது.

அதன் எதிரொலியே துப்புரவு பணியாளர் வேலைக்கு பட்டதாரி இளைஞர்கள் சென்றிருப்பது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பொருளாதார நிபுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories