தமிழ்நாடு

சென்னையில் 60 திருட்டு... போலிஸுக்கு 30 லட்சம் லஞ்சம்.. ஜெயிலில் ஸ்கெட்ச் : அதிர வைத்த திருவாரூர் முருகன்

சென்னையில் 60 இடங்களில் கொள்ளையடித்ததாகவும், போலிஸாருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் திருவாரூர் முருகன் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 60 திருட்டு... போலிஸுக்கு 30 லட்சம் லஞ்சம்.. ஜெயிலில் ஸ்கெட்ச் : அதிர வைத்த திருவாரூர் முருகன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ம் தேதியன்று கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். நகைக்கடையில் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

கொள்ளை தொடர்பாக மணிகண்டன், முரளி, கனகவள்ளி, கார்த்தி ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறை 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது. விசாரணையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்திய திருவாரூர் முருகன் தான் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாக இருப்பது தெரியவந்தது.

கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சுரேஷ் மற்றும் முருகனை போலிஸார் தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். முருகன் 11ம் தேதி காலை பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சரணடைந்த முருகனை ரகசியமாக திருச்சிக்கு அழைத்த வந்து பெங்களூரு போலிஸார் காவிரி கரையோரம் பதுக்கி வைக்கப்பட்ட லலிதா ஜுவல்லரியில் கடையில் கொள்ளையடித்த நகைகளை மீட்டுள்ளனர்.

சென்னையில் 60 திருட்டு... போலிஸுக்கு 30 லட்சம் லஞ்சம்.. ஜெயிலில் ஸ்கெட்ச் : அதிர வைத்த திருவாரூர் முருகன்

மேலும் முருகன் மீது, கர்நாடகாவில் சுமார் 100 இடங்களில் கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது தொடர்பாகவும் முருகனிடம் விசாரிக்க வேண்டும் என பெங்களூரு போலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல தமிழகத்தில் சென்னையில் மட்டும் 60 இடங்களில் கொள்ளையடித்ததாக முருகன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். அதைத்தொடர்ந்து தமிழக போலிஸார் முருகனிடம் நடத்திய விசாரணையில், சென்னை மாநகரின் முக்கியப் பகுதியான அண்ணாநகர், கே.கே.நகர், திருமங்கலம் மற்றும் அமைந்தகரை போன்ற பகுதிகளில் முருகன் கைவரிசையைக் காட்டியது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது முருகன் சென்னை புழல் சிறை மற்றும் திருச்சி மத்திய சிறைச்சாலைகளில் இருந்தாகவும், அங்கிருந்து இதற்கான திட்டத்தை தீட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் 60 திருட்டு... போலிஸுக்கு 30 லட்சம் லஞ்சம்.. ஜெயிலில் ஸ்கெட்ச் : அதிர வைத்த திருவாரூர் முருகன்

இந்தக் கொள்ளை சம்பவங்களை வெளியில் செய்வதற்கு சிறைக்கு வந்து செல்லும் கைதிகளில் ஏழு பேர் கொண்ட கும்பலை தயார் செய்துள்ளான். அவர்கள் மூலம் கொள்ளை சம்பவங்களை சிறையில் இருந்தே செயல்படுத்தியதாகவும் முருகன் கூறியுள்ளான்.

மேலும் கொள்ளையடித்த பணத்தை உல்லாசமாக இருக்கச் செலவு செய்ததாகவும் கூறியுள்ளான். மேலும் மற்றொரு அதிர்ச்சித் தகவலும் வெளிவந்துள்ளது. முருகனின் கொள்ளை சம்பவம் தெரிந்த சென்னை மாநகர போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு 30 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளான்.

முருகனிடம் லட்சம் பெற்று கொள்ளையடிக்க போலிஸ் அதிகாரியே உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் இன்னும் சில முக்கிய போலிஸ் அதிகாரிகளும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories