தமிழ்நாடு

“வெளிப்படைத் தன்மை இல்லாவிடில் முறைகேடுகளை எப்படி வெளிக்கொணர்வது?” - ஆர்டிஐ வழக்கில் ஐகோர்ட் கேள்வி!

பொது நிர்வாகத்தில் வெளிபடை தன்மை இல்லாவிட்டால் முறைகேடுகளையும்,சட்ட விரோத நடவடிக்கைகளையும் வெளிகொண்டு வரமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

“வெளிப்படைத் தன்மை இல்லாவிடில் முறைகேடுகளை எப்படி வெளிக்கொணர்வது?” - ஆர்டிஐ வழக்கில் ஐகோர்ட் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் படித்த பவன்குமார் காந்தி என்பவர் தனது தேர்வு நகல்களை வழங்கக்கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் அந்த தகவல்கள் வழங்கப்படாததால் மாநில தகவல் ஆணையத்தை நாடினார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த தகவல் ஆணையம் பவன்குமார் காந்தி கோரிய விவரங்களை வழங்க சட்ட பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கும் தகவல்களை வழங்கவேண்டும் என பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார்.

பொது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாவிட்டால் முறைகேடுகளையும், சட்ட விரோத நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டு வரமுடியாது எனக் கூறிய நீதிபதி, பொது நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய கொண்டுவரப்பட்ட உன்னதமான சட்டம்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என குறிப்பிட்டுள்ளார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், அரசு நிர்வாக நடவடிக்கைகளுக்கு அரசு அதிகாரிகளை பொறுப்பாக்குகிறது என தெரிவித்த நீதிபதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை விரைந்து முடித்து வைக்கவேண்டும் என பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories