தமிழ்நாடு

“நகை கொள்ளை வழக்கில் தப்பிக்க கர்நாடக போலிஸாருடன் கூட்டு சேர்ந்தாரா திருவாரூர் முருகன்?- போலிஸ் சந்தேகம்!

திருச்சியில் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் சரணடைந்த முக்கியக் குற்றவாளி முருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரூ. 4.30 கோடி மதிப்பிலான நகைகளை போலிஸார் மீட்டுள்ளனர்.

“நகை கொள்ளை வழக்கில் தப்பிக்க கர்நாடக போலிஸாருடன் கூட்டு சேர்ந்தாரா திருவாரூர் முருகன்?- போலிஸ் சந்தேகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் கடந்த 2ம் தேதியன்று கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். நகைக்கடையில் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

கொள்ளை தொடர்பாக மணிகண்டன், முரளி, கனகவள்ளி, கார்த்தி ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறை 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது. விசாரணையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்திய திருவாரூர் முருகன் தான் மூளையாக இருப்பது தெரியவந்தது.

கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சுரேஷ் மற்றும் முருகனை போலிஸார் தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். முருகன் 11-ம் தேதி காலை பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை பெங்களூரு பொம்மனஹள்ளி காவல்நிலையத்தில் வேறு ஒரு திருட்டு வழக்குப் பதிவு செய்து அம்மாநில போலிஸார் விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் நகைகளை காவிரி ஆற்றின் அருகில் மறைத்து வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படியில் திருச்சி வந்த பெங்களூரு போலிஸார் பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் முட்செடிகளுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ தங்க நகைகளை அங்கிருந்து மீட்டனர்.

முருகன் | மணிகண்டன் | சுரேஷ்
முருகன் | மணிகண்டன் | சுரேஷ்

பின்னர் இதுகுறித்து எந்த தகவலையும் திருச்சி போலிஸாருக்கு தெரிவிக்காமல் பொம்மனஹள்ளி போலிஸார் திருவெறும்பூரில் முருகன் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்யச் சென்றனர். ஆனால் முன்பே, திருச்சி போலிஸார் முருகன் வீட்டை பூட்டி சீல் வைத்ததால் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் நகைகளுடன் பெங்களூருக்கு விரைந்த பொம்மனஹள்ளி போலிஸாரை பெரம்பலூர் போலிஸார் நடத்திய வாகன சோதனையில் பிடித்தனர். மேலும் நகைகளுடன் சிக்கிய பொம்மனஹள்ளி போலிஸார் திருட்டு நகைகளை பறிமுதல் செய்து கொண்டு செல்கிறோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டு திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் அறிவுறுத்தலின் படி, பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்துக்கு பெங்களூரு போலிஸாருடன் முருகனை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

இதையடுத்து, ஆயுதப்படை வளாகத்துக்கு வந்த திருச்சி தனிப்படை போலிஸார், பெங்களூரு போலிஸார் மற்றும் முக்கியக் குற்றவாளி முருகனிடம் பூசத்துறையில் பதுக்கி வைத்த நகைகள் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

“நகை கொள்ளை வழக்கில் தப்பிக்க கர்நாடக போலிஸாருடன் கூட்டு சேர்ந்தாரா திருவாரூர் முருகன்?- போலிஸ் சந்தேகம்!

இந்த விசாரணையில் அவை திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகள் தெரியவந்து. பின்னர் கடை மேலாளரை வரவழைத்து திருடுபோன நகைகளா என உறுதி செய்யப்பட்டது. இதுவரை இந்த வழக்கில் 16.25 கிலோ தங்க, வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முருகன் குறித்த தகவலையும் தமிழக காவல்துறைக்கு அளிக்காமல் பெங்களூரு போலிஸார் விசாரணையை மேற்கொண்டது குறித்து கர்நாடக மாநில காவல்துறை தலைமைக்கு தமிழக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட நகைகளை பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவர்கள் அனுமதியுடன் திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக மாநில காவல்துறையினர் உறுதி அளித்தனர். இந்த விசாரணை முடிந்ததும் பொம்மனஹள்ளி போலிஸார் முருகனை பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் தனிப்படைப் போலிஸார் பெங்களூரு சென்று முருகனை விசாரிக்கவும் முடிவு எடுத்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் பொம்மனஹள்ளி போலிஸாருக்கும், முருகனுக்கும் தொடர்பு இருப்பதாக திருச்சி போலிஸ் வட்டாரங்கள் கூறியதாக தகவல் வெளியானது. மேலும் தனக்கு தெரிந்த பொம்மனஹள்ளி குற்றப்பிரிவு போலிஸ் அதிகாரியின் அறிவுறுத்தலின்படியே முருகன் அங்கு சரண் அடைந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுகிறது.

banner

Related Stories

Related Stories