தமிழ்நாடு

கவனக்குறைவால் உடல் நசுங்கி பலியான தாய், மகள் : பதபதைக்க வைக்கும் நாமக்கல் சிசிடிவி காட்சிகள் !

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில், தாயும் மகளும் உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவனக்குறைவால் உடல் நசுங்கி பலியான தாய், மகள் : பதபதைக்க வைக்கும் நாமக்கல் சிசிடிவி காட்சிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. இவர் ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பணிக்குச் செல்லும்போது, தனது ஆறு வயது மகளை பள்ளியில் கொண்டு சென்று விட, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்பகுதியில் உள்ள சேலம்-கோவை நெடுஞ்சாலையை கடப்பதற்குச் சித்ரா நின்று கொண்டிருந்த நிலையில், பள்ளி பேருந்து ஒன்று சாலையை கடந்தது. அந்நேரத்தில், சாலையின் மறுமுனையைக் கவனிக்காமல் சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த லாரி சித்ராவின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

லாரியின் சக்கரத்தில் சிக்கிய சித்ராவும், அவரது ஆறு வயது மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது இணையதளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. சாலையைக் கடக்கும் முன் ஒரு நிமிடம் நின்று சாலையின் இருபுறங்களையும் கவனித்து கடந்திருந்தால், இந்த விபத்து நடக்காமல் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories