தமிழ்நாடு

6 வயது சிறுமி ஐகோர்ட்டில் தொடர்ந்த பொதுநல வழக்கு - எதற்காக தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தெற்கு தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவரும் 6 வயது மாணவி பள்ளியை சீரமைக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

 6 வயது சிறுமி ஐகோர்ட்டில் தொடர்ந்த பொதுநல வழக்கு - எதற்காக தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

மீஞ்சூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் அதிகை முத்தரசி (வயது 6). இவர் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் மாணவி அதிகை முத்தரசி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

“நான் படிக்கும் தொடக்கப் பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருக்கிறது. சுவரில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசிகிறது. மேலும் பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக விரோத செயலால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இப்பள்ளி 2.21 ஏக்கரில் இருக்கிறது. இதில் 3 ஆயிரத்து 200 சதுர அடியில் பழைய மற்றும் பாழடைந்த கட்டிடத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இது மாணவ-மாணவிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. பள்ளி வளாகத்தில் மாலை வேளையில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது.

எனவே பாழடைந்த பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்கவும், வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல்களை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 6 வயது சிறுமி ஐகோர்ட்டில் தொடர்ந்த பொதுநல வழக்கு - எதற்காக தெரியுமா?

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ஷேசாயி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு திருவள்ளூர் கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீஞ்சூர் வட்டார கல்வி அலுவலர் பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் நேரில் ஆஜராகி வருகிற 16ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

வழக்கறிஞரான மாணவியின் தந்தை பாஸ்கரன் கூறும்போது, “எனது மகள் படிக்கும் அரசுப் பள்ளியின் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதையும், சுகாதாரம் இல்லாமல் இருப்பதையும் பார்த்ததும் உண்மையிலேயே வேதனை ஏற்பட்டது.

இந்த தொடக்கப் பள்ளி 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பகுதியில் தனியார் பள்ளிகள் வரும்வரை அரசு தொடக்கப் பள்ளியில் 700 மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் பள்ளியில் கல்வித் தரத்தையும், கட்டிடத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கத் தவறி விட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஐகோர்ட்டை அணுகி இருக்கிறோம்” என்றார்.

banner

Related Stories

Related Stories