தமிழ்நாடு

2023ம் ஆண்டுக்குள் தனியார் மயமாகும் சென்னை ரயில்வே : மத்திய அரசின் அடுத்த ’பலி’ - ரயில்வே நிர்வாகம் ?!

தென்னக ரயில்வே துறையை 2023-ம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மோடி அரசு முடிவு எடுத்துள்ளது.

2023ம் ஆண்டுக்குள் தனியார் மயமாகும் சென்னை ரயில்வே : மத்திய அரசின் அடுத்த ’பலி’ - ரயில்வே நிர்வாகம் ?!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க தீவிரமாக முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சேலம் உருக்காலை, விமான நிலையங்கள், ரயில் பெட்டித் தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவங்கள் மற்றும் ரயில்வே துறை என அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, மக்களுக்குச் சேவை செய்யப்போவதாக பா.ஜ.க அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.

தற்போது ஒருபடி மேலே சென்று பொதுத்துறையில் எடுத்த எடுப்பில் கைவைத்தால் தனியார் முதலாளிகள் நஷ்டத்தை சந்திப்பார்கள் என்பதால் அந்தந்த பொதுத்துறையை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னோட்டம் பார்த்துக்கொள்ள அனுமதி வழங்க உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

இதில் முதலாவதாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே துறையில் தனியார்மயத்திற்கு முன்னோட்டம் அளிக்க மோடி அரசு முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தென்னக ரயில்வே துறையை 2023-ம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையை கொண்டுவர மோடிஅரசு முணைப்புக் காட்டுகிறது.

2023ம் ஆண்டுக்குள் தனியார் மயமாகும் சென்னை ரயில்வே : மத்திய அரசின் அடுத்த ’பலி’ - ரயில்வே நிர்வாகம் ?!

அதன்படி, தமிழகத்தில் சென்னை - பெங்களூரு, சென்னை - கோவை, சென்னை - மதுரை போன்ற வழிதடங்களில் தனியார் ரயில் சேவையை கொண்டுவர திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சென்னை புறநகர் மின்சார ரயில் பாதைகளிலும் தனியார் ரயில் சேவையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “மோடி அரசின் இந்த நடவடிக்கை தனியாருக்கு ரயில்வே துறையை ஒப்படைப்பதற்கான சோதனை முயற்சியாகத்தான் பார்க்கிறோம். இதனால் ரயில்வே ஊழியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, பயணிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்படும்.

மேலும் அந்த நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் டிக்கெட் விலையை உயர்த்தும். பாஸ் மூலம் பயணிக்கும் முறையும் ரத்து செய்வார்கள். இனி ரயிலை இந்தியன் ரயில்வே துறை நிர்வகிக்காது; அதற்கு மாறாக தனியார் பெரும் நிறுவனங்கள் நிர்வகிக்கும். இதனைத் தடுக்க ஊழியர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து போராடவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories