தமிழ்நாடு

புதிய முதலீடு ஒப்பந்தம் போட்டதாக முதல்வர் கூறுவது, போலியான ஒப்பந்தமாகவே தெரிகிறது: கே.பாலகிருஷ்ணன் சாடல்!

முதல்வர் வெளிநாட்டு பயணத்தில் புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போட்டதாக கூறுவது, கிட்டத்தட்ட ஏமாற்றும் விதத்திலான போலியான ஒப்பந்தம் என்றே தெரிகிறது என கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

புதிய முதலீடு ஒப்பந்தம் போட்டதாக முதல்வர் கூறுவது, போலியான ஒப்பந்தமாகவே தெரிகிறது: கே.பாலகிருஷ்ணன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் ஆரம்பத்தில் இருந்தே பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது. வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தன்னுடைய பொறுப்புகளை பிற அமைச்சர்களிடம் அளிக்காமல் சென்றது பெரும் சந்தேகத்தை ஏறப்படுத்தியது.

அதுமட்டுமின்றி முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய போதும், அ.தி.மு.க அரசு அதற்கான முறையான தகவலை கூட தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்படுகின்றனர். அவை ஏன் மூடப்பட்டன? என்பது தான் அடிப்படை கேள்வி. மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. பொருளாதாரம் நலிவடைந்து விட்டது. பின்னலாடை தொழில்களும் நலிவடைந்து போனது. அதற்கு மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை என்பதே முதன்மை காரணம். ஜி.எஸ்.டி. வந்த பின்னர் மக்களின் எல்லா தொழிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

புதிய முதலீடு ஒப்பந்தம் போட்டதாக முதல்வர் கூறுவது, போலியான ஒப்பந்தமாகவே தெரிகிறது: கே.பாலகிருஷ்ணன் சாடல்!

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் அவருக்கு நல்ல சுற்றுலா அனுபவமும், ஓய்வும் கிடைத்திருக்குமே தவிர தமிழகத்திற்கு துளியும் பயனும் தராது. வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை ஈர்ப்பதைக் காட்டிலும், தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு உரிய சலுகைகளை வழங்கினாலே தொழில் மேம்படும்.

அவர்களின் கூட்டணியில் உள்ள பா.ஜ.க அரசின் சட்டங்களால் இந்தியாவில் இருந்து ரூ.30 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடு திரும்பிச் சென்று விட்டதாக கூறுகின்றனர். இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடு மிக வேகமாக வெளியேறிச் செல்லும் நிலையில், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போட்டதாக அ.தி.மு.க அரசு கூறுகிறது. இது கிட்டத்தட்ட மக்களை ஏமாற்றுவதற்கு போலியான ஒப்பந்தம் என்றேப் பார்க்க முடிகிறது.

இந்த பயணம் மூலம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு முதலீடு வருவதற்கோ, வேலைவாய்ப்பு பெருகுவதற்கோ வாய்ப்பு இல்லை. அவ்வாறு முதலீடு வந்தால் நிச்சயம் அதை வரவேற்போம்.” என்று தெரிவித்தார்

புதிய முதலீடு ஒப்பந்தம் போட்டதாக முதல்வர் கூறுவது, போலியான ஒப்பந்தமாகவே தெரிகிறது: கே.பாலகிருஷ்ணன் சாடல்!

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் சாதியக் கொடுமை அதிகரித்து வருகிறது. ஏன் இன்னமும் சாதிய பாகுபாடு இருப்பது மிக வேதனையளிக்கிறது. சாதிகளின் அடிப்படையில் மயானம் இருக்கிறது. நகரங்கள், கிராமங்களில் பொது மயானங்களை அமைக்க வேண்டும். இதற்காக பொதுமாயனம் கேட்டு விரையில் போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

முன்னதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அது இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை கேரள அரசு நிறைவேற்றியுள்ளது. கிடப்பில் போடப்பட்டுள்ள சட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories