தமிழ்நாடு

மதத்தால் காதலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு - காதலி வீட்டின் முன்பு தீக்குளித்த காதலன் உயிரிழப்பு

சென்னையை அடுத்த எர்ணாவூரில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலியின் வீட்டின் முன்பு தீக்குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் மொய்தீன். இதே நிறுவனத்தில் சென்னை எர்ணாவூர் நேதாஜி நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணிக்கு சேர்ந்தார். இவருக்கும் மொய்தீனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப்பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது.

இவர்களின் காதலுக்கு மதத்தின் பெயரால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணை வேலைக்கு அனுப்பாமல், அவரது குடும்பத்தார் தடுத்து நிறுத்தி விட்டனர். கடந்த 20 நாட்களாக அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் மொய்தீனால் முடியவில்லை.

இந்நிலையில், காதலியின் வீட்டிற்கு சென்ற மொய்தீன் ஏன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு தன்னை மறந்துவிடுமாறு சொல்லிவிட்டு அந்தப்பெண் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

இதனால் விரக்தியடைந்த மொய்தீன் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீவைத்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் மொய்தீனின் உடலில் பற்றியிருந்த தீயை அனைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மொய்தீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

banner

Related Stories

Related Stories