தமிழ்நாடு

ஏ.டி.எம் மையத்தில் கொள்ளையடித்த 13 லட்சத்தோடு மதுபோதையில் சிக்கிய திருடன் : பெரம்பலூரில் ருசிகரம்

கொள்ளையடித்த பணத்துடன் பெரம்பலூரில் குடிபோதையில் ஆட்டோவில் சுற்றித்திரிந்த நபரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையன் ஸ்டீபன்
கொள்ளையன் ஸ்டீபன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொள்ளையடித்த பணத்தில் குடித்துவிட்டு, குடிபோதையில் ஆட்டோவில் சுற்றிய நபரை, ஆட்டோ டிரைவர் ஒருவர் போலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் ரோவர் ஆர்ச் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகையாவின் ஆட்டோவில் ஏறி லாட்ஜுக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்.

ஆனால், ஆட்டோவில் பயணித்தவர் குடிபோதையில் இருந்ததால் எந்தத் தங்கும் விடுதியிலும் ரூம் தர மறுத்துள்ளனர். வெகு நேரம் சுற்றிய பிறகு, போதையில் இருந்த பயணி மீது ஆட்டோ ஓட்டுநர் முருகையாவுக்கு சந்தேகம் எழுந்ததால் அவர் வைத்திருந்த பையைச் சோதித்துப் பார்த்ததில் அதில் கட்டுக்கட்டாக லட்சக் கணக்கில் பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் முருகையா
ஆட்டோ ஓட்டுநர் முருகையா

இதனையடுத்து, தந்திரமாக வேறு ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பயணியை பெரம்பலூரில் உள்ள காவல் நிலையத்தில் முருகையா ஒப்படைத்துள்ளார்.

போதையில் இருந்த நபரை தெளிய வைத்த பின்னர் விசாரணை மேற்கொண்டதில், அவர் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஸ்டீபன் (41) என்றும், அவர் வைத்திருந்த பணம் திருச்சியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம்-ல் கொள்ளையடிக்கப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், கொள்ளையன் ஸ்டீபன் மீது ஏற்கெனவே கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை திருச்சி போலிஸாரிடம் பெரம்பலூர் போலிஸார் ஒப்படைத்துள்ளனர். ஏ.டி.எம்-ல் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தொகையான 12 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும் திருச்சி போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொள்ளையடிக்கப்பட்ட பணம்
கொள்ளையடிக்கப்பட்ட பணம்

இதற்கிடையே, போதையில் இருந்த பயணியிடம் கட்டுக்கட்டாக பணம் உள்ளது தெரிந்தும் நேர்மையாகவும், புத்திக் கூர்மையுடனும் செயல்பட்டு போலிஸில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் முருகையாவை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories