தமிழ்நாடு

கோவிலில் நுழைய அனுமதி இல்லை.. சுதந்திர தினம் தேவையா? : கருப்புக்கொடி ஏற்றி ஆதி திராவிட மக்கள் எதிர்ப்பு !

வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேட்டில் பட்டியலின மக்கள் சுதந்திர நாளில் கருப்புக் கொடியேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கள்ளிமேட்டில் பழமைவாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சமுதாய மக்களும் உபயதாரர்கள் ஆகவும், மண்டகப்படி செய்பவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

நாளடைவில் இந்த முறை மாற்றப்பட்டு ஆதிதிராவிட மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டன. அதாவது, ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் மண்டகப்படி செய்யும் உரிமை பறிக்கப்பட்டு , அவர்களின் தெருக்களில் சாமி ஊர்வலம் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து பலகட்டங்களாக ஆதிதிராவிட மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். பல்வேறு கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது உரிமைகளை கேட்டும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அம்மக்கள், சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் வகையில், வீடுகள்தோறும் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

சுதந்திர திருநாளில் ஆதிதிராவிட மக்கள், கிராமத்தில் கருப்புக் கொடி ஏற்றி தங்கள் உரிமைக்காக போராடி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories