தமிழ்நாடு

கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாற்ற பாஜக அரசு முயற்சி : பொன்முடி சாடல்!

குலக் கல்வியையும், இந்தி, சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்காகவே புதிய கல்விக் கொள்கையை கொண்டுவர பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது என தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி சாடியுள்ளார்.

கல்வியை மாநில பட்டியலில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாற்ற பாஜக அரசு முயற்சி : பொன்முடி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தி.மு.க ஆய்வு செய்த அறிக்கையை தி.மு.க. எம்.பிக்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் வழங்கினர். அது தொடர்பாக வருகிற ஆக.,1ம் தேதி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துபேச அமைச்சர் அழைத்துள்ளார் என முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

வேலூரில் மத்திய மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வளர்ச்சிக்கு வித்திடாது. மாறாக சமூக நீதியைப் பாதிக்கும் எனக் கூறியுள்ளார். பள்ளிக்கல்வி முதல் அனைத்திலும் மாநிலத்தின் உரிமையைப் பாதிக்கும் வகையிலேயே புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது என குற்றஞ்சாட்டினார்.

இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் வகையிலும், குலக்கல்வியை புகுத்தும் வகையிலும், இருமொழிக் கொள்கைக்கு எதிராகவும் மும்மொழித் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.

மேலும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற ஒன்றை மத்திய அரசு மோடியின் தலைமையில் உருவாக்கியுள்ளது. இதனால் மாநிலங்களின் அதிகாரம் பறிபோகும். கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவே இது போன்ற திட்டங்களை பா.ஜ.க. அரசு கொண்டுவருகிறது எனவும் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories