தமிழ்நாடு

பா.ஜ.க என்ன செய்தாலும் அதற்கு இவர்கள் ‘ஆமாம்...சாமீ’ போடுவார்கள் : அ.தி.மு.க.,வை வறுத்தெடுத்த துரைமுருகன்

தமிழகத்தில் நடைபெறும் தபால்துறை தேர்வில் தமிழை அனுமதிக்காததை கண்டித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது தி.மு.க.

பா.ஜ.க என்ன செய்தாலும் அதற்கு இவர்கள் ‘ஆமாம்...சாமீ’ போடுவார்கள் : அ.தி.மு.க.,வை வறுத்தெடுத்த துரைமுருகன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் நடைபெறும் தபால்துறை தேர்வில் தமிழை அனுமதிக்காததை கண்டித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது தி.மு.க. அந்தத் தீர்மானத்தின் மீது தி.மு.க - அ.தி.மு.க உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடந்தது.

சமீபத்தில் நடைபெற்ற தபால்துறை தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வினாக்கள் இடம்பெற்றன. தேர்வில் தமிழ் அனுமதிக்கப்படாது என தபால் துறை சுற்றறிக்கை அனுப்பியதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

தபால் துறையின் இந்தி திணிப்பு முயற்சிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில், தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என தி.மு.க உறுப்பினர் தங்கம் தென்னரசு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

அதுகுறித்த விவாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தி.மு.க உறுப்பினர்கள் இதுகுறித்து மக்களவையில் குரல் எழுப்பவேண்டும் என விவாதத்தை திசைதிருப்பும் வகையில் பேசினர்.

அதைதொடர்ந்து பேசிய தி.மு.க உறுப்பினர் துரைமுருகன், “இப்பிரச்னையில் அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் ஒரே கருத்தென்றால், மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றத் தயாரா?'' எனக் கேட்டார். பின்னர், முதல்வரைக் கண்டித்து தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், “மத்திய அரசு, எல்லாத்துறைகளிலும் இந்தி மொழியைத் திணித்து வருகிறது. தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசோ கண்டித்து மட்டுமல்ல மத்திய அரசை வலியுறுத்திக்கூட தீர்மானம் நிறைவேற்ற மறுக்கிறது. மத்திய அரசு தமிழகத்தின் மீது இந்தியை திணித்தாலும், அ.தி.மு.க அரசு அதை ஏற்றுக்கொள்ளும்” என்றார்.

banner

Related Stories

Related Stories