தமிழ்நாடு

இந்திய விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு வாய்ப்பு!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி உதய கிருத்திகா விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

இந்திய விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வரும் 2022-ம் ஆண்டில் ‘ககன்யான்’ எனும் விண்கலம் ஏவப்பட இருக்கிறது. இந்த விண்கலத்தில் முதன்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவிருக்கிறது இந்தியா.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொள்ள இருக்கிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி உதய கிருத்திகா விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

விண்வெளி வீரர்களைப் பற்றி படித்து விண்வெளி ஆராய்ச்சியின் மீது ஆர்வம் அதிகரித்ததன் மூலம் விண்வெளிக்குச் செல்ல விரும்பியதாக மாணவி உதயா கிருத்திகா தெரிவித்துள்ளார். இவர் உக்ரைனில் உள்ள விமானப்படை பொறியியல் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.

இந்நிலையில், விண்வெளி வீராங்கனையாக போலந்தில் பயிற்சி பெறவிருக்கிறார் உதய கிருத்திகா. ஆண்டுக்கு ஒருமுறை போலத்தில் பயிற்சி அறிவிக்கப்படும். அதற்கு விண்ணப்பிப்பவர்களில் சில சான்றிதழ்களின் அடிப்படையில் பயிற்சிக்குரிய நபர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த ஆண்டு பயிற்சி பெறத் தேர்வாகியுள்ள ஒரே இந்தியர் உதய கிருத்திகா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளிக்குச் செல்ல 10 பேருக்கு பயிற்சியளிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. உதய கிருத்திகா விண்வெளி வீராங்கனையாக போலந்தில் பயிற்சி பெற்றுத் திரும்பும் பட்சத்தில் அவருக்கும் விண்வெளி பயிற்சி அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது நடந்தால் இந்திய விண்கலத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் முதல் இந்தியப் பெண்ணாக உதய கிருத்திகா இருப்பார்.

பலரின் உதவியோடு பொருளாதார ரீதியாக நம்பிக்கை பெற்றுக் கடினமாகப் படித்த உதய கிருத்திகா அரசும் தனக்கு உதவிபுரிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories