தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

6 மாதங்களுக்குப் பிறகு இன்று சென்னையில் ஆலந்தூர், தரமணி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அடுத்த 48 மணிநேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை வலுப்பெற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் அண்மையில் உருவான வாயு புயலால் காற்றின் ஈரப்பதம் குறைந்ததாலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசியது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தற்போது வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை தீவிரமடையும் என கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களும், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களிலும் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்நிலையில், சென்னையில் தரமணி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 6 மாதங்களுக்குப் பிறகு தற்போது சென்னையில் மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories