தமிழ்நாடு

தமிழகத்தில் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் - கோவையில் ஷாக் ஆன பா.ஜ.க 

தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் கம்யூனிஸ்ட்டுகள் - கோவையில் ஷாக் ஆன பா.ஜ.க 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுது. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது முடிந்துள்ளது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தி.மு.க.,வின் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்த கட்சிகளின் சார்பில் மதுரை, கோவை, நாகை, திருப்பூர் என நான்கு தொகுதிகளில் போட்டியிட்டனர். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் இடதுசாரி வேட்பாளர் முன்னிலையில் உள்ளனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் 22,425 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

கோவை மக்களவைத் தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் பி.ஆர். நடராஜன் 36,653 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அதே போல் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராஜ் 63,357 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இடதுசாரி அணிகளில் தற்பொழுது அதிக வாக்கு வித்தியாத்தில் முன்னிலையில் உள்ளவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருப்பூர் மக்களவைத் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயன் 48,992 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

இது இடதுசாரி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க செல்வாக்கு கொண்ட கோவையில், பா.ஜ.க வேட்பாளரான சி.பி ராதாகிருஷ்ணனை மார்க்சிஸ்ட் கட்சி பின்னுக்குத் தள்ளியுள்ளது. வெற்றி பெறுவதற்கு அதிக அளவில் முயற்சி செய்து அதன் பலனை பெற்றுள்ளதாக அக்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்து மக்கள் கட்சி திருப்பூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரை வெற்றிபெற அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வி அடைந்துள்ளது என்பது சுப்புராயன் வாங்கிய வாக்குகளை பார்க்கும் போதே தெரிகிறது என சிபிஐ கட்சி கருத்துக் கூறுகின்றனர்.

தமிழகத்தில் இடது சாரிகள் போட்டியீடும் நான்கு தொகுதியிலும் வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர் எனபது குறிபிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories